வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு) 30.07.25

வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு) 30.07.25



  நலம் தரும் மருத்துவம் பகுதியில் வெண்டைக்காயின் மருத்துவ பயன்களை பற்றி தெரிந்துக்கொண்டேன். எளிதாக எங்கும் கிடைக்கும் வெண்டைக்காயை இனி உணவில் கொஞ்சம் தாராளமாகவே சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று முடிவு செய்துவிட்டேன்.


  முகில் தினகரனின் 'கடைசில இப்படி ஆயிடுச்சே!' சிறுகதையை படித்து மனம் நொறுங்கிப் போனேன். அடப்பாவமே, பிள்ளையார் பிடிக்க இப்படி குரங்காக போச்சே என்று வருத்தமாக இருந்தது. சிலசமயம் நாம் இப்படிதான் நல்லது என்று நினைத்து செய்வது, இப்படி மோசமாக அமைந்து தொலையும்.


  வயதான காலத்தில் இன்றைய சூழ்நிலையில் வீட்டில் சேர்த்து வைத்திருக்கும் புத்தகங்களை படித்துக்கொண்டு காலத்தை கழிப்பதும் ஒருவகையில் நல்லதுதான் என்பதை 'நிம்மதியான வாழ்க்கை' என்ற சிறுகதையில் நன்னிலம் இளங்கோவன் உணர்த்தியிருந்த விதம் அவர் எனக்கே சொல்வது போலிருந்தது.


  'நந்திகேசுவரின் மகத்துவம்' என்ற கட்டுரையில் சிவ.முத்து லட்சுமணன் நந்தியை பற்றி நிறைய தகவல்களை தந்து வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார்.அவர் இந்த கட்டுரையில் தஞ்சாவூர் பெரியகோவில் நந்தியை பற்றியும் கொஞ்சம் எழுதியிருக்கலாம். ஏனோ ஒரு வரிக்கூட எழுதவில்லை!


  'கிளி, மைனா, சிட்டுக்குருவி, வண்ணத்துப்பூச்சியை ரசித்துக்கொண்டிருந்த எனக்கு இப்பொழுது நீதான் என் ரசனையில் முதலிடத்தில் இருக்கிறாய்' என்ற முத்து ஆனந்த்தின் கவிதை, சிறுவன் இளைஞன் ஆனதால் வந்த மனமாற்றம் என்பது புரிந்தது. மிகவும் ரசித்தேன்!


  எலுமிச்சைப் பழம் நன்மைகள் பலதரும் பழமென்பது தெரியும்! ஆனால், எலுமிச்சைப் பழத்தின் தோலிலேயே இவ்வளவு நன்மைகள் இருப்பதை இப்போதுதான் அறிகிறேன்.


  குழந்தைகள் பகுதியில் ஹரணியின் நாவல்பழம் கவிதையும், கதை சொல்லும் தாத்தா கவிதையும் சிறப்பாக இருந்தது. அதுபோல தெனாலிராமன் கதையும், முல்லா கதையும் நல்ல நகைச்சுவையாக இருந்தது!



  -சின்னஞ்சிறுகோபு,

   சிகாகோ.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%