
வெண்டைக்காய் இரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகளுக்கு ஆரோக்கியம் தரும் காய்கறி என்பதையும்,
செரிமானம், வளர்சிதைமாற்றம், ஒட்டு மொத்த உடல் நலனுக்கு உதவும் என்பதையும் நலம் தரும் மருத்துவம் மூலம் அறிந்தேன்.
ஏ.எஸ் கோவிந்தராஜன் "தளபதியுடன் சமரசம்" என்ற முல்லா கதையைப் படித்தவுடன், ஒருமுறை முல்லா மாடியில் இருக்க , கீழே இருந்த மனைவி அங்கே என்ன சத்தம்? எனக் கேட்க அவர் " சட்டை விழுந்தது" என்றதும். அதற்கா இவ்வளவு சத்தம் என கேட்டதும் ,
" சட்டைக்குள்" நானிருந்தேன் என முல்லா கூறியதும் என் நினைவிற்கு வந்தது.
பானுமதி நாச்சியார் " ஊர்மிளை" தொடரில் சிவ தனுசு முறித்த காட்சியை, " எடுத்தது கண்டனர், இற்றது கேட்டனர்' எனும் கம்பராமாயண வரிகளால் விளக்கியது அருமை.
ஸ்ரீகாந்த்
திருச்சி
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?