
சிவ பூசையில் கரடி என்ற சொல்லாடல் பல காலமாகப் பல பொருட்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக ஒரு முக்கியமான வேலையில் ஒருவர் ஈடுபட்டிருக்கும் போது ஏற்படும் இடையூறு
என்ற தொனியில். ஆனால் கரடிகை என்ற இசைக் கருவி பயன்பாடு காலப் போக்கில் திரிந்து கரடி என்றாகி இருப்பதைப் பாடலுடன் ஆதார பூர்வமாக விளக்கியுள்ளார் கட்டுரையாளர்.அரிய முயற்சி
லிச்சிப் பழம் சாப்பிடும்போது இனிப்பாக இருக்கும் .அதனுள் இத்தனை பயன்கள் பொதிந்திருப்பது இப்போது தான் தெரிகிறது. பயனுள்ள கட்டுரை.
டிஜிட்டல் மோசடி பற்றிப் பலகாலமாகச் செய்திகள் வந்த வண்ணமாயிருந்த போதிலும் முதன்முதலாக 9 பேர் தண்டனை பெற்றிருப்பது நல்ல நடவடிக்கை. தொடரட்டும்
நைஜர் நாட்டில் பிழைக்கப் போன இடத்தில் 2 இந்தியர்களைச் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.
பாவம் . பரிதாபம் . அவர்கள் குடும்பம் வேறு என்னாகும்.இரக்கமற்ற செயல்.
தமிழுக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்துக் கொண்ட தியாகி திரு. கி த பச்சையப்பனை வணங்குவோம். தமிழை வளர்க்க, பாதுகாக்க எப்படி யெல்லாம் அரும்பாடு பட்டிருக்கிறார்கள்.
சப்தமிடும் மெளனங்கள்
தொடரில் இப்போது தான் தெளிந்திருக்கிறார். சுமுகமான நிலையை எட்டியிருக்கும் நிலை தொடரட்டும் தொய்வின்றி
நகைச்சுவையில் மணமகனைச் சுடுகாட்டுக்கு அழைத்துச் செல்வது போன்ற குறிப்பு சிறப்பில்லை.
சிவ.சே. முத்துவிநாயகம்
திருநெல்வேலி
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?