தமிழ் நாடு இ பேப்பரின் சீர் மிகு வளர்ச்சி ஆச்சரியம் பிளஸ் ஆனந்தம் அளிக்கிறது.
இன்றைய சூழலில்
வாசகர்களிடம் சந்தா உட்பட எந்த எதிர் பார்ப்பும இல்லாமல்
தொடர்ந்து தொய்வின்றி இயங்கி வருவது எவ்வளவு கஷ்டமான காரியம் என்று அடிக்கடி நினைத்துப் பார்க்க வைக்கிறது.
பிரம்ம முகூர்த்தத்தில்
செல்போனை ஆன் பண்ணி, இ பேப்பரை ஓப்பன் பண்ணினால்
உள் நாட்டில் இருந்து உலகச் செய்திகள் அனைத்தும் அற்புதமாக வடிவமைக்கப் பட்டு
அடுக்கடுக்காக காட்சி தந்து நமக்கு களிப்பையும் கருத்தையும் ஊட்டி வரும் அந்த அனுபவம் இருக்கிறதே...அடடா..
என்ன தவம் செய்தோமோ என்று நம்மை அறியாமல் பரவசத்துடன் பாடத் தோன்றுகிறது.
செய்திகள் மட்டுமா? நம் அன்றாட வாழ்வுக்குத் தேவையான -- முக்கியமான விஷயங்களை யெல்லாம் யோசித்து யோசித்து பட்டியலிட்டு அளித்தாற் போல் வாரி வழங்கி நம்மைத் திணற அடிக்கிறார்கள். இந்த மகா வேள்வியில் ஈடுபட்டுள்ள தலைமை ஆசிரியர், ஆசிரியர் குழுமத்தின் அங்கங்கள் தங்கங்கள்
மற்றும் வெளியில் தெரியாமல் உள்ளே வேர்களாய் விளங்கி
செயல்படுபவர்கள் என்று அனைவரையும்
உள்ளம் குளிர்ந்து உவகை அடைந்து ஆராதிக்கத் தோன்றுகின்றது என்று அடியேன் கூறுவதில் இம்மி அளவேனும் மிகையோ பம்மாத்தோ
கிடையாது என்பதை சத்தியம் அடித்துச் சொல்கிறேன்.
கவிதைப் பக்கங்களை
நித்தம் நித்தம் தங்களின் அற்புதமான சிந்தனை ஆற்றலால்
சிறப்பாய் நிரப்பி
வாசகப் பெருமக்களை
மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துகின்ற கவிஞர் பெருமக்களை
இந்த தருணத்தில் நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.
அடியேனின் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் அடிக்கடி தோன்றும் எண்ணம் இது தான்...
தமிழ் நாடு இ பேப்பர் நமக்கு அற்புதமான சத்சங்க சங்கமத்தை நமக்கு உருவாக்கி தந்திருக்கிறது.
இதை ஆகச்சிறந்த முறையில் வழியில் பயன்படுத்திக் கொண்டால் அனைவரும் இங்கே
சிறந்த முறையில் பயன் அடையலாம்.
பேப்பரில் எழுதினோம்
பேப்பரை வாசித்தோம் என்பதோடு நில்லாமல் அடுத்த கட்ட நகர்வுக்கு நாம் யோசிக்க வேண்டும் என்பது அடியேனின் தாழ்மையான கருத்து.
காரணம்... இங்கே வாசகப் பெருமக்களாக அனைத்துத் தரப்பினரும் ( மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், அதிகாரிகள், ஐடி இளைஞர்கள், ஆற்றல் மிக்க பெண்கள், அனுபவத் திறன் மிக்க
மூத்த குடிமக்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம்)
பரிணமித்துக் கொண்டிருப்பது என்பது எளிதில் வாய்க்காத அரிய சந்தர்ப்பம். இதை கண்டிப்பாக ஆக்கப் பூர்வமான காரியத்திற்கு பயன் படுத்தியே ஆக வேண்டும். ஆகவே அன்பார்ந்த நம் வாசக நட்புகள் அனைவரும்
இந்த கோணத்தில் யோசிக்க வேண்டும் என்று மீண்டும் பணிவன்புடன் வேண்டுகிறேன்.
இந்த நேரத்தில் இன்னொன்றையும்
சுட்டிக் காட்டிட விழைகின்றேன்.
கவிதைப் பக்கங்களில்
ஆசிரியர் நமக்கு அளித்திருக்கும் நல்ல வாய்ப்பை -- சுதந்திரத்தின் மேன்மையை எண்ணிப் பார்த்தால்
இயங்கும் சக்தி மேலும் வலுப்படும்.
நெறிப்படும்.
தவமாய் இந்தப் பணியை மேற் கொண்டிருக்கும் தலைமை ஆசிரியர்
அவர்களுக்கு ஒரு வார்த்தை...
சுவாமி விவேகானந்தர் ஆழ்ந்து யோசித்து சொன்னது இது:
'என்னிடம் நூறு இளைஞர்கள் இணைந்து வந்தால் போதும்... இந்த உலகத்தையே தலைகீழாகபுரட்டி காட்டுகிறேன்...'
இந்த சமயத்தில் நீங்களும் சுவாமி விவேகானந்தர் சொன்னதையே மனதில் வரித்துக் கொண்டு வாருங்கள்
சுவாமிஜீ விரும்பிய
அதே குணமுள்ள வீரியமிக்க இளைஞர் கள் ( இளமை என்பது வயதைப் பொறுத்தது அல்ல...மனதைப் பொறுத்தது என்பதையும் சேர்த்து நினைவில் கொள்க)
அணி திரள்வார்கள்.
உங்கள் உயரிய நோக்கத்திற்கு உறு துணையாக நிச்சயம் நிற்பார்கள். காரணம்
நல்ல முயற்சிக்கு எல்லாம் வல்ல இறைவனின் துணை கண்டிப்பாக உண்டு...
உண்டு!
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியோம் பராபரமே!
வாழ்க வையகம்
நெல்லை குரலோன்
பொட்டல் புதூர்