வாசகர் கடிதம் (பி.சிவசங்கர்) 05.08.25

வாசகர் கடிதம் (பி.சிவசங்கர்) 05.08.25


கல்கி பத்திரிகையைப்

பற்றி ஒரு தடவை மறைநத எழுத்தாளர் 

பாலகுமாரன் எழுதியது நினைவுக்கு வருகிறது.


உலகளாவிய விவரங்களைத் தெரிந்து கொள்கின்ற 

புரிந்து கொள்கின்ற

ஆற்றல் உடைய 

நவீன பண்பாடு மிக்க குடும்பப் பெண்மணியாக மிளிர்கிறார். கன்னா பின்னாவென்று டிரஸ் பண்ணிக் கொள்ள மாட்டாள்...அதிரடியாக பேச மாட்டாள்... பேச்சில், செயலில், சிந்தனையில் என்று எல்லாவற்றிலும் ஒரு 

நிதானம் இருக்கும்...

அதே சமயம் அறிவு,

ஞானம் அபாரமாக இருக்கும். இது தான் 

கல்கி பத்திரிகைக்கான

உருவம்.


எழுத்துச் சித்தர் பாலகுமாரனின் இந்த 

விளக்கம் அப்படியே 

தமிழ் நாடு இ பேப்பருக்கு இன்றைய காலகட்டத்தில் மிகச் சரியாக பொருந்துவதாக நான் நினைக்கிறேன்.

இது என் மனசாட்சி வழி நின்று உள்ளன்புடனும் உறுதியுடனும் சொல்லுகிறேன்.


இந்த என் கருத்து மற்றவர்களின் கருத்துக்கு இணக்கமாக இருக்கிறதா என்று பரிசோதனை முறையில் தமிழ் நாடு இ பேப்பரின் சில வாசக நட்புகளிடம் ஒப்பித்தேன். 

அவர்களும் என்னுடைய இந்த கருத்தை ஆமோதித்தது மட்டுமல்ல... ஆராதித்து ஆனந்தம் அடைந்தார்கள்.


அசோக் ராஜா எழுதிய தெய்வீக ரகசியங்கள் 

கட்டுரை அருமை!

ஆன்மீக அன்பர்களுக்கு வரப்பிரசாதம்!

இன்று வெளியாகி இருந்த இரு சிறுகதைகளும் பரவாயில்லை ரகம் தான் என்றாலும் பரவாயில்லை!


நலம் தரும் மருத்துவம் பகுதியில் வரும் செய்திகள் அனைத்தையும் தவறாமல் 'சேவ் ' செய்து தொகுத்து வருகிறேன்.

மூளைக்கும் வயிற்றுக்கும் தொடர்பு உள்ளது என்று குறிப்பிட்டிருந்தது மனதில் பதிந்தது.

இந்தியா மீது கணிசமாக வரி உயர்த்தப் படும்.

டிரம்ப் மீண்டும் மீண்டும் தேவையில்லாமல் இந்தியா மீது சீண்டுவது அவருக்கு நிச்சயம் பாதிபாபைத் தான் உண்டு பண்ணும்.


தூத்துக்குடியில் புதிய மின்சார கார் தொழிற்சாலை..

முதலமைச்சர் திறந்து வைத்த செய்தி தித்திப்பு.

இதனால் இரண்டு மூன்று மாவட்ட மக்களுக்கு நிச்சயம் பயன் கிடைக்கும்.முதலவர்

ஒரே கல்லில் சில மாங்காய் தட்டி விட்டார்.

இபிஎஸ் வருகையை அடுத்து இந்த திறப்பு விழா! 

பணம் பாதாளம் வரை என்றால், பாலிடிக்ஸ் ஆறு கால் பாய்ச்சலில் பாதாளம் வரை பாயும் தானே! இதை யெல்லாம் ரசிக்கும் மனோபாவத்தை நாம் பெற்றால் தான் பிழைத்தோம்!

தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் சாவித்ரி தேவி முகர்ஜி வரலாறு.

திரில்லிங்காக இருந்தது.


வாசக நட்புகளுக்கு இந்தப் பகுதி பொக்கிஷம் என்றால் மிகையாகாது.

வாழ்த்துகள்!

இந்தப் பகுதியை கண்ணில் ஒற்றிக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது.

ஆசிரியர் குழுமத்தின் 

வெற்றி!


இன்னும் வடித்துச் சொல்ல எத்தனை எத்தனையோ அம்சங்கள் தமிழ் நாடு இ பேப்பரில் அணி வகுத்து நிற்கின்றன.

வாசக உறவுகளை 

வேற லெவலுக்கு அழைத்துச் செல்லும் 

இந்த அரிய முயற்சி 

ஆக்கப்பூர்வமான பல

காரியங்களை வென்றெடுக்கும் என்பது உறுதியிலும் உறுதி!



பி.சிவசங்கர்

கோவை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%