காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சேகர்பாபு நேரில் ஆய்வு; மாணவர்களுடன் கலந்துரையாடினார்
Aug 06 2025
14

சென்னை, ஆக 4–
இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் புதிய கூடுதல் வகுப்பறை கட்டடத்தில் உள்ள வகுப்பறைகள், ஆய்வகங்கள் மற்றும் கழிவறைகள் பராமரிப்பு ஆகியவற்றை நேரில் ஆய்வு செய்தார்.
அதோடு, அங்குள்ள வசதிகள் குறித்தும், கல்வியின் அவசியம் மற்றும் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வி திட்டங்கள் குறித்தும் பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
2021–ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும். இப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திடும் வகையில் ரூ.11.15 கோடி செலவில் தரை மற்றும் மூன்று தளங்களில் 32 வகுப்பறைகள் மற்றும் 5 ஆய்வகங்கள், நூலகம், கழிப்பிட வசதிகள் மற்றும் மின்தூக்கி வசதியுடன் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடத்தை 27.6.2025 அன்று திறந்து வைத்தார். இக்கட்டடத்தில் வகுப்பறைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
முதலமைச்சர் சொந்த நிதியில் வழங்கிய கல்விக் கட்டணம் மற்றும் கல்வி உபகரணங்களுடன் கூடிய புத்தகப்பை அனைத்து மாணவர்களுக்கும் கிடைத்ததா என்றும், மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மிதிவண்டிகள் குறித்தும், புதிய கட்டடத்தில் உள்ள வசதிகள் மற்றும் கூடுதல் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். அதோடு, கல்வியின் அவசியம் மற்றும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் பள்ளிக்கல்வி திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடினார். மேலும், படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டுமெனவும், தேவையானபோது குடிநீர் எடுத்துக் கொள்ள வேண்டுமெனவும் அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் சி. ஹரிப்ரியா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ரவிச்சந்திரன், பள்ளி முதல்வர் ஜெயந்தி மற்றும் ஆசிரிய பெருமக்கள் உடனிருந்தனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?