news Breaking News
clock

பசுமைப் புத்தாய்வுத் திட்டத்தின் முதல் தொகுதி நிறைவு: 40 இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கினார் உதயநிதி

பசுமைப் புத்தாய்வுத் திட்டத்தின் முதல் தொகுதி நிறைவு:  40 இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கினார் உதயநிதி

சென்னை, ஆக 4–


துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையின் சார்பில் தமிழ்நாட்டின் முன்னோடித் திட்டமான முதலமைச்சரின் பசுமைப் புத்தாய்வுத் திட்டத்தின் முதல் தொகுதி நிறைவு விழாவில், 40 பசுமைத் தோழர்களுக்கு முதலமைச்சரின் பசுமைப் புத்தாய்வுத் திட்ட நிறைவுச் சான்றிதழ்களை வழங்கினார். இவர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மேலும் முதலமைச்சரின் பசுமைப் புத்தாய்வுத் திட்ட சிறப்பிதழையும் வெளியிட்டார்.


கடந்த ஆகஸ்ட் 2023ல் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட இத்திட்டமானது, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையால் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆற்றல் கல்விகளுக்கான நிறுவனத்தின் ஒருங்கி ணைப்புடன் செயல்படுத்தப்பட்டது. அரசு இயந்திரத்தில் இளம் திறமையாளர்களை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இத்திட்டத்தில், மாவட்டத்திற்கு ஒருவர் என 38 மாவட்டங்களுக்கு 38 பசுமைத் தோழர்கள் மற்றும் மாநில அளவில் இருவர் என மொத்தம் 40 பசுமைத் தோழர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.தமிழ்நாடு முதலிடம்


இந்தியாவிலேயே, இளைஞர்களால் வழி நடத்தப்படுகின்ற, மாவட்ட ங்களுடன் ஒருங்கிணைந்த பசுமைப் புத்தாய்வுத் திட்டத்தினை மாபெரும் அளவில் நிறுவனப்படுத்தியதில் தமிழ்நாடு தான் முதலிடம் வகிக்கிறது. இத்திட்டமானது புத்தாய்வுத் திட்டம் என்பதனையும் கடந்து, மாவட்டத்திற்கென குறிப்பிட்ட காலநிலை திட்டங்கள் மற்றும் நிகழ்நேர கண்காணிப்பு இணையதளம், குடிமக்கள் பங்கேற்பு மற்றும் தொடர்புக் கட்டமைப்புகள், தொழில் நுட்பம் சார்ந்த சுற்றுச்சூழல் சேவைகளை வழங்குதல், அடிப்படையளவில் மதிப்பிடக்கூடிய சூழலியல் முன்னேற்றங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட கொள்கைக் கருவியாக செயல்பட்டு வருகிறது.


இத்திட்டத்தின் இரண்டாம் தொகுதியின் 38 – மாவட்ட அளவிலான பணிக்காண விண்ணப்பங்கள் மே மாதம் முதல் வரவேற்கப்பட்டன. விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதி, தமிழ் மொழிப் புலமை, தலைமைப் பண்பு மற்றும் தரவு பகுப்பாய்வுத் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தால் தேர்ந்தெ டுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட பசுமைத் தோழர்கள் மாத உதவித் தொகையாக ரூ.65,000 -மும் பயணச் செலவினத்திற்கென கூடுதலாக ரூ. 10,000-மும் பெறுவர்.


38 இடங்களுக்கு 9000


மாபெரும் வரவேற்பினைப் பெற்ற இத்திட்டத்தின் இரண்டாம் தொகுதியின் 38 இடங்களுக்கு சுமார் 9000-ற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தது, இந்திய அளவில் சுற்றுசூழல் நிர்வாகம் மற்றும் காலநிலை நடவடிக்கையில் இளைஞர்களுக்கு அதிகரித்து வரும் ஆர்வத்தைக் காட்டுகிறது.


புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இப்பசுமைத் தோழர்களுக்கு 30 நாள் அறிமுகப் பயிற்சியும் அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் பணியும் வழங்கப்படும். அவர்களது கடமையினையும் பணியின் பயன்களையும் உறுதி செய்ய மாதந்திர பணி அறிக்கைகள் மற்றும் செயல்திறன் மதிப்பீடு ஆகியவை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும்.


வரும் காலங்களில், இப்பசுமைப் புத்தாய்வுத் திட்டமானது தமிழ்நாட்டின் காலநிலை மாற்றத்திற்கெதிரான ஆயத்தத் திட்டங்களுக்கு அடித்தளமாக விளங்கும். மேற்கூறிய இயக்கங்களின் செயலாக்கத்தில் போதுமான அனுபவங்களைப் பெற்ற முதல் தொகுதி பசுமைத் தோழர்கள் சிலர் உயர் கல்வி மற்றும் காலநிலை மாற்றம் சார்ந்த பணிகளில் இணைந்துள்ள நிலையில் நடைமுறையில் இருக்கும் அரசுத் திட்டங்களில் சிலர் பணியமர்த்தப்படவிருக்கின்றனர்.


எதிர்வரும் இப்புத்தாய்வுத் திட்ட தொகுதிகளும் வரம்புகள் விரிவாக்கப்பட்டு, மக்கள் பங்கேற்பு மற்றும் காலநிலை முன்னுரிமைகளை உள்ளடக்கி தமிழ்நாட்டினை நிலையான சூழலியல் நிர்வாகத்தில் தேசிய அளவில் தலைமை வகிக்கச் செய்யும்படி உருவாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


இந்நிகழ்ச்சியில், நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ, காலநிலை மாற்றத்துறை இயக்குநர் ஆ.ர. ராகுல் நாத், வனத்துறைத் தலைவர் ஸ்ரீனிவாஸ் ஆர். ரெட்டி, சுற்றுச்சூழல் துறை சிறப்புச் செயலாளர் அனுராக் மிஸ்ரா, வனத்துறை சிறப்புச் செயலாளர் ஆஷிஸ் குமார் ஸ்ரீவஸ்தவா, மாசு கட்டுப்பாடு வாரிய தலைவர் எம். ஜெயந்தி, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் ஜெ.பிரகாஷ், அண்ணா பல்கலைக்கழக ஆற்றல் கல்விகளுக்கான நிறுவனத்தின் இயக்குநர் எம்.வெங்கட ரமணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News