வாசகர் கடிதம் (பி.சிவசங்கர்) 27.07.25

வாசகர் கடிதம் (பி.சிவசங்கர்) 27.07.25

 


'ஒரு வினாடி கூட நாம் நம்மை சந்தேகிக்க அனுமதித்து விடக் கூடாது' என்ற டால்ஸ்டாயின் உன்னத வரிகளை 

தினசரி ஒரு நிமிடம் 

யோசித்தால் போதும்.

எந்தச் சூழலிலும் தன்னம்பிக்கை குன்றாது. மாறாக உற்சாக ஊற்று எப்போதும் உயிர்ப்பாய் நம்மை ஈர்ப்பு சக்தியுடன் இயக்கிக் கொண்டே இருக்கும். இது நிச்சயம்.


தமிழ் நாடு இ பேப்பரின் வளர்ச்சி 

மனநிறைவைத் தருகிறது நமக்கு.

உலகில் தினசரி ஆயிரம் ஆயிரம் நிகழ்வுகள் நடக்கலாம்.

ஆனால் அவற்றை யெல்லாம் செய்தி வடிவில் கொண்டு வந்து விரிக்க முடியாது. அப்படியே விரித்தாலும் அவற்றை யெல்லாம் வாசித்து வாழ்க்கைக்கு வர முடியாது.இது தான் நிதர்சனம். இந்த எதார்த்தம் நன்கு உணர்ந்து நமக்குத் தேவையான செய்திகளை மட்டும் கன கச்சிதமாய் தேர்வு செய்து நல்ல முறையில் தொகுத்து நமக்கு நச்சென்று தந்து தரத்தை நிலை நாட்டுவது என்பது எப்பேர்ப்பட்ட காரியம்.

 எந்த ஆர்ப்பாட்டமோ ஆரவாரமோ இல்லாமல் அர்த்த அடர்த்தியான அமைதியில் வெளி வந்து கொண்டிருக்கும் 

தமிழ் நாடு இ பேப்பரின் மகிமையை 

மகத்துவத்தை புரிந்து கொண்டு பயணத்தைத் தொடரும் போது தான் 

உண்மையின் உரை கல் இதுவென்றும் 

இதைத் தூக்கி நிறுத்தும் பணியில் 

நாம் அனைவரும் ஒத்திசைந்து இயங்க வேண்டும் என்பதும் 

தெள்ளிதின் புரியும்.


பிரதமர் பதவியில் தொடர்ந்து 4078 நாட்களை கடந்து மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் சாதனையை வென்றுள்ள பிரதமர் மோடிக்கு சபாஷ் சொல்லத் தோன்றுகிறது!

 தமிழ் நாட்டின் 

உள் கட்டமைப்பை மேம்படுத்துவதில் அவர் முனைப்பு காட்டி வருவதற்கு நன்றி சொல்லவும் தோன்றுகிறது.

உடல் உறுப்புகள் திருட்டை முறைகேடு என்பதா?

அமைச்சர் மா.சுப்பிர

மணியனுக்கு அண்ணாமலை கண்டனம்.

திருட்டா? முறைகேடா?

என்று பட்டிமன்றம் நடத்துவதா முக்கியம்?

இந்த அநாகரீகமான இழிசெயலை தடுத்து நிறுத்த என்ன செய்ய வேண்டும் என்பதில் 

ஆர்வம் காட்ட, இரு தரப்பினரையும் 

வேண்டுவோம்!

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் 

மின்சார வாகன உற்பத்தி முழுமையாக நின்று விடும் என்று வெடி குண்டு வீசி யிருப்பது வேதனை அளிக்கிறது.

அரிய வகை காந்தம் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இந்த நிலைமை என்று சொல்கிறார்.

இதற்கு சீனாவின் கட்டுப்பாட்டு கொள்கையும் காரணம் என்று துணைக் காரணம் சேர்க்கிறார்.

இந்த விஷயத்தில் அரசியல் நுழையாமல் இருந்தால் சரி தான்.

எல்லாம் எளிதில் சரியாகி விடும்.

பீஹாரில் பத்திரிகை யாளர்களுக்கு ஓய்வூதியம் 6000 ல் இருந்து 15000 ஆக உயர்வு என்று முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்ததன் மூலம் அடுத்தாண்டு நடைபெற வுள்ள தேர்தலுக்கு தயாராகி வருகிறார் என்பது அப்பட்டமாக தெரிகிறது.

எது எப்படியோ,

பத்திரிகையாளர்களுக்கு இது ஊக்கம் அளிக்கும் திட்டம்!

பல்சுவை களஞ்சியத்தில் வெளியாகி இருந்த காபி பற்றிய வரலாறு 

கும்பகோணம் டிகிரி காபியை குடித்து சுவைத்த மாதிரி இருந்தது. சபாஷ்!

கவிதைகள் வழக்கம் போல் அணி வகுப்பாய் வந்து ஆனந்தம் ஊட்டின.

நித்தம் நித்தம் இத்தனை கவிதைகள் தந்து கவிப் பிரியர்களான என் போன்றோரை இன்ப வெள்ளத்தில் திளைக்க வைக்கும் தமிழ் நாடு இ பேப்பரின் தாராள மனதுக்கு என்றென்றும் நன்றி!

என்றென்றும் வாழ்த்துகள்!

என்றென்றும் ஆதரவு 



பி.சிவசங்கர்

கோவை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%