தமிழ் நாடு இ பேப்பரை வாசித்து விட்டு தவறாமல் வாசகர் கடிதம் எழுதும் எனக்கு என் பிரிய சகோதரி கூறும் அட்வைஸ் என்ன தெரியுமா?
அருள் தரும் தெய்வம் இதழ் பற்றி நாலு வரியாவது முதலில் எழுதிய பிறகு பேப்பர் மேட்டருக்கு போகும் பழக்கத்தை வைத்துக் கொள்.'
ஒரு தடவை இல்லை...
இதை அவ்வப்போது எனக்கு நினைவுப் படுத்தி வரும் சகோதரியிடம், இப்படி சொல்வதற்கு என்ன காரணம் என்று கேட்டேன்.
கேட்டதும் சிரித்தவாறே அவள் சொன்ன பதிலில் நான் எதிர்பாராத லாஜிக் இருந்தது.
மிகவும் ரசித்தேன்.
தமிழ் நாடு இ பேப்பர் வெற்றிகரமாக மூன்றாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கிறது.
ஆனால் அருள் மிகு தெய்வம் அப்படி இல்லை. நேற்று பிறந்த பச்சிளம் பண்புக் குழந்தை...
அதைப் பாராட்டி சீராட்டி வளர்க்க வேண்டியது நம் எல்லோரின் கடமை என்று அடித்துச் சொல்வேன்.
இதற்கும் இன்னொரு முக்கியமான காரணம் உண்டு.
தமிழ் நாடு இ பேப்பர் இலவச சேவை. இரண்டாண்டு நிறைவடைந்த பிறகும் கூட தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தின் தலைமைக்கு சந்தா
அறிவிக்கும் எண்ணம் கிஞ்சித்தும் இன்னும் வரலியே...
யாரும் ( மதிப்பு மிகு தலைமை உட்பட)
தயவு செய்து தப்பாக நினைக்க வேண்டாம்.
ஒரு பேச்சுக்காக இதைச் சொல்கிறேன்.
இ பேப்பருக்கு ஒரு மாதத்திற்கு ரூ1 என்று வைத்துக் கொண்டாலும் வருடம்
ரூ 12 கொடுத்தாலே போதும். ஓரளவு ஓரளவு நியாயமாகிப் போய் விடுமே! மனசாட்சி குறை சொல்லாதவாறு
பேப்பரை நித்தம் படித்து மகிழலாமே!
ஆக, தமிழ் நாடு இ பேப்பரை ஓசியில் படித்து களி இன்பம் காணும் நாம், அச்சிதழாக வெளிவரும் தெய்வம் இதழுக்காகவாவது
உடனடியாக சந்தாதாரராக ரெடியாக வேண்டாமா?
தாமத்தை தவிருங்கள்.
பரிசுகளை அள்ளுங்கள்!
இது என் அன்பான வேண்டுகோள்!
சரி, மேட்டருக்கு வருவோம்.
இன்றைய கவிதைப் பக்கங்கள் பளிச் பளிச்சென்று ஒளியில்
மிளிர்ந்து ஜொலித்தன.
அன்னை தெரசா அவர்களை நினைவு கூர்ந்து அவரை மையமாய் வைத்து
அற்புதமான கவிதை களால் ஆராதனை செய்து அசத்திய அன்பு கவிஞர்களுக்கு
அநேக பாராட்டு...
அன்புடன் வெளியிட்டு
கவுரவித்த ஆசிரியர் குழுமத்தின் பண்பு பேருள்ளத்திற்கும் நன்றி... நன்றி!
நலம் தரும் மருத்துவம் பகுதியில் அன்றாடம் உடல் ரீதியாக நாம் அனுபவிக்கும் அவஸ்தைகளை உற்று உணர்ந்து உபாயம்
ஊட்டி வரும் தமிழ் நாடு இ பேப்பரின்
மறுக்க முடியாத --
மறக்க முடியாத அற்புத சேவைக்கு ராயல் சல்யூட் சாரே!
வெளியாகி இருந்த
கை மாறிய கடிதம்
வார்த்தை விளையாட்டு ஆகிய
இரு கதைகளும் வாழ்க்கைப் பாடம்
புகட்டின.சபாஷ்..சபாஷ்!
ஊர்மிளை தொடரில் கே.பானுமதி நாச்சியார் தசரதனின் முடிவு பற்றி எழுதிய
கட்டுரையில் கடைசியாக, ' ஊர்மிளையின் ஊமை மனம் பரபரக்கும் சம்பவங்களை அசை போடக் காத்திருந்தது '
என்று குறிப்பிட்டிருந்தது ஏனோ நெஞ்சில் நிலைத்தது.
விநாயகர் பற்றி முழு முதற் கடவுள் என்ற தலைப்பில் சிவமுத்து லெட்சுமணன் எழுதியது கட்டுரை இல்லை...அருள் தரும் காவியம். வாழ்த்துக்கள்!
கவிதை ஒளி நூல் விமர்சனம் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தது.
நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சார்!
பல்சுவை களஞ்சியம்,
சிறுவர் மலர்
பக்கங்கள் பரவசம் அள்ளி வழங்கி பக்குவ மனோபாவம் ஊட்டியது.
நாளுக்கு நாள் மெருகேறி வாசக உள்ளங்களை மேம்படுத்தி வரும்
தமிழ் நாடு இ பேப்பரின் வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும்
வளத்திற்கும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
பி.சிவசங்கர்
கோவை