கோவை வாசக சொந்தம் பி.சிவசங்கர்
வாசகர் கடிதத்தில்,
தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தின் தரமான அச்சு ஆன்மீக வெளியீடான அருள் தரும் தெய்வம் இதழுக்கு சந்தாதாரர்
எண்ணிக்கையை அதிகப் படுத்துவது
வாசக உறவுகளின் தார்மீகக் கடமை என்ற
பொருளில் சுமார் ஒரு மணி நேரம் என்னுடன் அலைபேசியில் உரையாடியது அற்புத அனுபவம்.
என்னைப் பற்றி பெருமையாகப் பேசி
தன் பெருந்தன்மையையும்
அடக்கப் பண்பையும் கடிதத்தில் காட்டி யிருந்தார்.
வெறும் வார்த்தையில் வடை சுடாமல், உணர்வுப் பூர்வமாக இந்த விஷயத்தை அவர் அணுகிய விதம்
என்னை மிகவும் கவர்ந்தது.
இன்று தலைமை ஆசிரியர் அவர்கள்
தெய்வம் இதழ் குறித்து அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
தேர்ந்த வார்த்தைகளால் ரத்தினச் சுருக்கமாக
சொல்லியிருந்தார்.
மூன்று வருட சந்தா
ரூ 1000 செலுத்துவோருக்கு
ஐந்தடுக்கு முறையில்
பரிசு திட்டம் வேறு வாசகருக்காக ஸ்பெஷல் போனசாக
இருப்பது மகிழ்ச்சிக்குரியது.
என்னைக் கேட்டால்
கரும்பு தின்னக் கூலியா என்று தான் சொல்லுவேன்.
ஆனாலும் தமிழ் நாடு இ பேப்பர் குழுமம்
பரிசு கொடுத்து கொடுத்து பரவசம் காணும் பெருங்குணம்
கொண்டது என்பதை நாம் எல்லோரும் ஏற்கனவே அறிவோம் தானே!
பெருமைக்குரிய நிறுவனரும் தலைமை ஆசிரியருமான ஆற்றல் மிக்க பெருந்தகைக்கு சர்குலேசன் சம்பந்தமான வேலை
கொடுக்காமல், வாசக உறவுகளே அந்த நல்ல காரியத்தை பார்த்துக் கொண்டு புதிய புரட்சி பண்ண வேண்டும் என்பது தான் கோவை வாசகர் பி.சிவசங்கர்
அவர்களின் பெரு விருப்பம். நானும் அதற்கு மறு பேச்சு பேசாமல் உடன் பட்டேன்.
தலைமை ஆசிரியரை
ஏன் சர்குலேஷன் விஷயத்தில் ஈடுபடுத்தக் கூடாது?
காரணம் இருக்கிறது.
பரந்து பட்ட விஷய ஞானம் கொண்ட அவர்களை பத்திரிகை மேம்பாடு விஷயத்தில்
முழுக்க முழுக்க ஈடுபட வைத்தால் லாபம்
வாசகர்களாகிய நமக்குத் தான் என்பதில் சந்தேகமில்லை.
அறிவை --ஆற்றலை
விருத்தி செய்யும் களமாக -- மையமாக
பல்கலைக் கழகமாக (வாழ்க்கை)
தமிழ் நாடு இ பேப்பர் நிறுவனம் பொலிவுடன் நிகழ்வதற்கு வாசகப் பெருமக்கள் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள்...
என்று நினைத்துப் பார்த்தால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது...
உலகில் இதுவரை இப்படி யாரும் செய்யாததை தமிழ் நாடு இ பேப்பர் வாசகப் பெரு மக்கள்
செய்து காட்டி சரித்திர சாதனை புரிய அரிய வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது.
இதை அடிக்கோடிட்டு அழுத்தமாக ஏன் வலியுறுத்துகிறேன் தெரியுமா?
எளிமையான அணுகுமுறை
வாசகப் பெருமக்களிடம் அன்புடன் இதயப் பூர்வமான தொடர்பு...
கமர்ஷியல் நோக்கம் இல்லாத பயணம்...
சலிப்பில்லாத - சளைக்காத தொடர் உழைப்பு... உன்னதமான உயர் இலக்கு...என்று எத்தனையோ சிறப்பு அம்சங்களை தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்திடம் நாம் அனுபவப் பூர்வமாக
பார்க்கிறோம்.
இந்த மேலான சிறப்பு கள் தான் இப்படி யெல்லாம் சிந்தித்து எழுதத் தோன்றுகிறது.
நம்மில் சிலருக்கு இது கொஞ்சம் வித்யாசமாக தெரியலாம்...ஏன் சந்தேக ஊகங்கள் கூட தோன்றலாம். தப்பென்று சொல்ல முடியாது. காரணம்...
நாம் பழக்கப் பட்ட பாதையிலேயே பயணித்து சுகம் கண்டவர்கள்... அதனால் இந்த அணுகுமுறை புதிதாகத் தோன்றும்.
புதிராகவும் தோன்றும்.
அப்படி தோன்றும் அந்த சிலருக்காக சொல்கிறேன்...
இது சுயநலக் கலப்பு இல்லாத ஆத்மார்த்தமான உணர்வில் வெளிவந்த
கருத்துக்கள்... யோசனைகள்... சத்தியம் அடித்துச் சொல்கிறேன்...
எப்போதும் தன்னைப் பற்றியே நினைத்து
புழுங்கி தவிப்பது தரமான வாழ்க்கை கிடையாது.
சற்று நெகிழ்ந்து சற்று உருகி சற்று ஈரமாகி
விரிந்த பார்வையில்
இதயம் கனிவது அற்புதம் மிளிரும் மேம்பாடடைந்த வாழ்வு. கனி இருப்ப காய் நாட்டம் வேண்டாமே!
நண்பர் பி.சிவசங்கர்
கூறியது மாதிரி,
ஊர் கூடி தேர் இழுக்கும் போது
உவகையுடன் உள்ளத்தில் ஒரு வகையான சந்தோஷம் பொங்கும் அல்லவா? அந்தப் பேரன்பின் அற்புத அனுபவத்தை நாம் அனைவரும் பெற வேண்டும் என்பதற்காகத் தான்
இந்தத் தொடர் முயற்சிகளும் பிரயத்தனங்களும்...
இந்த நோக்கத்தைத் துல்லியமாக புரிந்து கொண்ட சில நண்பர்கள் மிகுந்த ஆர்வமுடன் இந்தத் தளத்தில் உற்சாகமாக இயங்கிக் கொண்டிருப்பது பெரிய ஆறுதலான விஷயம்....
சுற்றி வளைத்து கொஞ்சம் கூடுதலாக பேசியதை ஜுஸாக ஒரே ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால்...
தெய்வம் இதழ் சந்தாதாரர் எண்ணிக்கையை வாசகர்களே அணி திரண்டு வந்து உயர்த்திக் காட்டி, பத்திரிகை உலகில் மாபெரும் புரட்சியை
அன்பின் துணை கொண்டு அரங்கேற்றப் போகிறோம்.
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு நண்பர்களே...
முடியும் என்பதை மூச்சாக்குவோம்!
பி.வெங்கடாசலபதி
தென்காசி