கடிதம் எழுதுவது ஒரு கலை: அஞ்சல் அலுவலர் பேச்சு

கடிதம் எழுதுவது ஒரு கலை: அஞ்சல் அலுவலர் பேச்சு


வந்தவாசி, செப் 02:


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி காமராஜர் பகுதியில் உள்ள ஊராட்சி கிழக்கு ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நேற்று உலக கடிதம் தினம் முன்னிட்டு கடிதம் எழுதும் முறைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியை ஆ.சித்ரா தலைமை தாங்கினார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் முன்னிலை வகித்தார். ஆசிரியை கண்மணி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக ஓய்வுபெற்ற அஞ்சல் நிலைய அலுவலர் வி.தன்யகுமார் பங்கேற்று, பல்வேறு கடிதங்களை மாணவர்களுக்கு நேரில் காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் அனைத்து மாணவர்களும் தங்களது வீட்டிற்கு கடிதம் எழுதினர். போஸ்ட் மேன் வினோத் ராஜ் வாழ்த்துரை வழங்கினார். இறுதியில் பள்ளி ஆசிரியை சாந்தகுமாரி நன்றி கூறினார்.


பா. சீனிவாசன், வந்தவாசி.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%