வாசகர் கடிதம் (பி.வெங்கடாசலபதி) 11.09.25

வாசகர் கடிதம் (பி.வெங்கடாசலபதி) 11.09.25


மாக்சிம் கார்க்கி என்ற உலகப் புகழ் பெற்ற பிரபல எழுத்தாளர்...

ஒரு நாள் தன் நெருங்கிய நண்பருடன் நடைப் பயிற்சியில் இருந்தார்.


நண்பரிடம் திடீரென்று கேட்டார் கார்க்கி.


" உலகிலேயே மிகவும் புனிதமானது எது?"


உடனே நண்பர் சொன்னார்: "தாய்"


"இல்லை "


" தந்தை "


" இல்லை "


" குரு "


" இல்லை "


" நண்பன் "


" இல்லை "


" அன்பு "


" இல்லை "


" இரக்கம் "


" இல்லை "


" வீரம் "


" இல்லை "


" தர்மம் "


" இல்லை "


" வெற்றி "


" இல்லை "


" அறம் "


" மன்னிப்பு "


" இல்லை "


நண்பர் சொல்லச் சொல்ல, கார்க்கி 'இல்லை... இல்லை'

என்று மறுத்துக் கொண்டே போனதைப் 

பார்த்து, ஒரு கட்டத்தில் 

வெறுத்துப் போய்,

" நீங்களே பதிலை சொல்லி விடுங்கள்"

என்று அம்பேலாகி வாபஸ் வாங்கினார்.


இதைக் கேட்டு புன்னகை புரிந்த கார்க்கி, நானே சொல்லி விடுகிறேன் தோழரே...

இந்த உலகத்திலேயே 

புனிதமானது என்ன தெரியுமா?


தன் இருப்பின் மீது திருப்தி அடையாத மனிதன் தன்னை மேம்படுத்திக் கொள்வதற்காக 

பண்படுத்திக் கொள்வதற்காக 

செதுக்கிக் கொள்வதற்காக 

நெறிப் படுத்திக் கொள்வதற்காக 

வளப் படுத்திக் கொள்வதற்காக அவன் செய்கின்ற 

ஆற்றுகின்ற முயற்சி இருக்கிறதே...

அது தான் உலகிலேயே புனிதமானது " 

என்றாராம்.


அன்பான வாசக உறவுகளே!


இதை ஏன் இங்கே அடிக் கோடிட்டு அழுத்தமாக கூறுகிறேன் என்றால் 

தமிழ் நாடு இ பேப்பரின் வாசக

பெருமக்கள் அனைவருமே அறிவார்ந்தவர்கள்.

இந்த குறுகிய காலத்தில் லட்சக்கணக்கான அறிவார்ந்த வாசகர்களைப் பெற்றுள்ள தமிழ் நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுவினர் -- குடும்பத்தினர் அன்பிற் சிறந்தவர்கள்.

ஆற்றல் மிக்கவர்கள்...


ஆக, வாசகர்களும்,

ஆசிரியர் குழுவினரும் 

கார்க்கி கூறியது போல் தங்களை மேம்படுத்திக் கொள்வதற்காக நாளும் உழைக்கின்ற உன்னதமானவர்கள்.


இந்த அதி அற்புதமான சங்கமம் எப்போதும் நான் சொல்வது போல் 

நமக்கு இறைவனால் அருளப் பெற்ற பாக்கியம்...

கொடுப்பினை...!


இந்த கிடைத்தற்கரிய 

சந்தர்ப்பத்தை சரியாக முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்பது

தான் நமக்கான ஒரே நோக்கம்... பேரார்வம்!

நல்லதை நாடுவது தானே ஆறறிவுக்கு அழகு... ஆனந்தம்!


எல்லாம் வல்ல இறைவன் அருளால் தான், இந்த சிந்தனை 

என்னுள் மட்டுமல்ல 

இங்கே நம்மில் சிலருக்கு தீவிரமான 

தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.


கூறியது கூறல் என்பது குற்றமில்லை. காரணம்...திரும்பத் திரும்ப நல்லனவற்றை சிந்திக்கும் போது --

சொல்லும் போது --

செயல் படுத்தும் போது 

அதுவே வேதமாகிறது.

அதுவே புனிதமாகிறது.

அதுவே மந்திரமாகிறது.

இது வெறும் நம்பிக்கை இல்லை.

அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் பட்ட பேருண்மைகள்.


ஆகவே தான் தலைமை ஆசிரியரின் 

அசைக்க முடியாத - அளவிட முடியாத தன்னம்பிக்கை மிளிரும் செம்மையான செயல் பாடுகளில் நமக்கு 

இந்த அளவிலான 

ஈடுபாடும் ஈர்ப்பு விசையும் உண்டாகி 

இப்படி யெல்லாம் எழுத வைக்கிறது என்பதை உங்களிடம் 

உண்மையுடனும் உள்ளன்புடனும் எந்தவொரு ஒளிவு மறைவு இல்லாமல் 

வெளிப் படுத்துகிறேன்.


என்னைப் போல் இன்னும் சிலரும் இதே தீவிரத் தன்மையுடன் 

விரைந்து வேகமாகி இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

நமது வாசக உறவுகள் அனைவரிடமும் வேண்டிக் கேட்டுக் கொள்வது இது தான்...


தயவு செய்து தன்னலம் நோக்காத 

இந்த நல்ல உணர்வை 

புரிந்து கொள்ளுங்கள்.


தமிழ் நாடு இ பேப்பரின் புதிய வெளியீடான அருள் தரும் தெய்வம் இதழுக்கு சந்தாதாரர் எண்ணிக்கையை அதிகரிக்க வைத்திடும் 

பணியில் அனைவரும் 

ஆத்மார்த்தமாக ஈடு படுவோம்.


நமது உறவுகள் --

நட்புகளிடம் எடுத்துச் சொல்லி இந்த வேள்விப் பயணத்தில் அவர்களை இணைத்து வைப்போம்.


இதன் மூலம் தமிழ் நாடு இ பேப்பர் ஆசிரியர் குழுவினருக்கு உற்சாகம் ஊட்டி,

உன்னதமான இந்த பயணத்தை உயர்வு

படுத்துவோம்.

இதுவரை யாரும் செய்திராத புதுமை முயற்சிக்கு பூரண ஒத்துழைப்பு கொடுத்து மாபெரும் 

புண்ணிய புரட்சி செய்வோம்.

இந்த பூமியின்

பெருமையை வரலாற்றில் இடம் பெறச் செய்வோம்.


நம்மால் முடியும் 

நம்மால் முடியும் 

நம்மால் முடியும்!


பி.வெங்கடாசலபதி

தென்காசி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%