வாசகர் கடிதம் (வெ.ஆசைத்தம்பி) 24.07.25

வாசகர் கடிதம் (வெ.ஆசைத்தம்பி) 24.07.25


" ஈரானை மீண்டும் தாக்குவோம் " என்று டிரம்ப் கூறுகிறார். இது உலகத்திலேயே நான் தான் பெரியவன் என்று ஆணவத்தில் பேசும் பேச்சு போல தோன்றுகிறது. ஆணவம் என்றாவது ஒரு நாள் அழிந்தே போகும். 


இன்றைய காலகட்டத்தில் உலக அமைதிக்கு பெரும் கேடாக இருக்கும் நாடுகள் அமெரிக்காவும் இஸ்ரேல் மற்றும் ரஷ்ய நாடும் ஆகும்.


காசாவில் 33 பேர் பட்டினியால் இறந்து போயிருக்கின்றனர் என்ற செய்தி மிகுந்த கவலையை அளிக்கிறது. பசித்த வயிற்றுடன் உணவு பொருள் வழங்கும் இடத்துக்கு வந்தால் அங்கே படுகொலை செய்கிறது இஸ்ரேல் ராணுவம். 


பட்டினியால் இறப்பவர்கள் ஒரு புறம்  - உணவுப்பொருள் வழங்கும் இடத்துக்கு சென்று அங்கு தாக்குதலில் இறப்பவர்கள் மறுபுறம் என்று பல வழிகளில் காசாவில் இருக்கும் அப்பாவிகள் மரணமடைகிறார்கள்.


இஸ்ரேல் ஆட்சியாளர்களுக்கும் ராணுவத்துக்கும் மனிதாபிமானம் என்று சொல்லுக்கு பொருள் தெரியாது போலிருக்கிறது.


போராளிகள் மீது உள்ள கோபத்தை பச்சிளம் குழந்தைகளை கொல்வதில் காட்டுவது எவ்வளவு அரக்கத்தனமானது என்பதை இவர்கள் அறிவதில்லை.


ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப ரேஷன் கார்டு போன்றவை நம்பகமான ஆவணங்கள் இல்லை என்று தேர்தல் கமிஷன் கூறுகிறது. 


அப்படியானால் ஆதார் அட்டையை அனைவருக்கும் கொடுப்பதற்காக செலவழிக்கப்பட்ட பல லட்சம் கோடி ரூபாய்கள் வீணாக்கப்பட்டு இருக்கின்றனவா ?  


பேருந்து கட்டண உயர்வு இல்லை என்று போக்குவரத்து துறை திட்டவட்டமாக அறிவித்திருக்கிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் எந்த அரசாவது கட்டணத்தை உயர்த்த விரும்புமா?


சென்னை மாநகரத்தில் பல ஆண்டுகளாக லட்சக்கணக்கான மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயணத்தை தமிழக அரசு அளித்து வருகிறது. 

இந்த சலுகை மாநிலத்தின் மற்ற பகுதிகளில் வாழும் மூத்த குடி மக்களுக்கு அளிக்கப்படுவதில்லை. காரணம் என்ன என்பதை அரசு அறிவிக்க வேண்டும்.


               ********


வெ.ஆசைத்தம்பி 

தஞ்சாவூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%