வாசகர் கடிதம் (வெ.ஆசைத்தம்பி) 29.08.25

வாசகர் கடிதம் (வெ.ஆசைத்தம்பி) 29.08.25


ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் " ரஷ்யா உக்ரைன் உடன்

போர் புரிவதற்கு நிதியுதவி அளிக்கிறது " என்று அமெரிக்க அதிபரின் 

ஆலோசகர் பீட்டர் நவரோ கூறியுள்ளார்.


வரிகளை உயர்த்துவதன் மூலம் இந்தியாவை பயமுறுத்தி பணிய வைக்கலாம் என்று அமெரிக்கா நினைக்கிறது.

இந்தியாவோ பதட்டப்படாமல் இருக்கிறது.

இந்தியாவின் இந்த நிதானம் அமெரிக்காவை அச்சம் கொள்ள வைக்கிறது.


" இந்தியா பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன் " என்று நாற்பதாவது முறையாக பீற்றிக் கொள்கிறார் ட்ரம்ப்.

அவரது பிதற்றலுக்கு நமது பிரதமர் தனது வாயால் பதில் அளிக்க வேண்டும். 


ஆனால் தேசிய முக்கியத்துவம் பெற்ற நிகழ்வுகளில் நமது பிரதமர் தனது கருத்தை தெரிவிப்பதே கிடையாது.

மௌனமாகவே இருந்து விடுகிறார். அவரது அமைச்சர்கள்தான் பதில் கூறுகின்றனர்.


கேரளாவில் மூளையை தின்னும் அமீபா நோய் 18 பேரிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதிய நோய்களின் அரங்கேற்றம் பெரும்பாலும் கேரளாவில் தான் நடைபெறுகிறது. 


இந்த நோய்க்கு நீர்மூலம் பரவும் கிருமிகளை காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

ஒரு குறிப்பிட்ட நாளில் கிருமிகள் இருக்கும் குடிநீர் ஆதாரங்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுவதை

ஒரு இயக்கமாக நடத்த கேரள மாநில அரசு முடிவு செய்திருக்கிறது.


பொதுவாக உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் பொறுப்பில் இருக்கும் குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளை

மாதாமாதம் சுத்தம் செய்வதாக கணக்கு எழுதி விட்டு அந்த தொட்டிகளில் இருந்து அசுத்த நீரை குழாய்களின் மூலம் வீடுகளுக்கு வினியோகம் செய்கின்றனர்.


 தண்ணீர் தொட்டி சுத்தம் செய்யப் பட்டதாக கணக்கு எழுதுவதில் நிலையான லஞ்சம் சம்பந்தப்பட்டவர்களுக்கு கிடைக்கிறது.


தமிழக முழுவதும் இந்த ஊழல் நடைபெறுகிறது.

அரசியல் கட்சிகள் சம்பந்தப்பட்டிருப்பதால் 

இந்த ஊழல் அடக்கி வாசிக்கப்படுகிறது. 


கேரளாவை போல ஏதாவது புது நோய் தமிழகத்திலும் பரவினால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும்.


வெ.ஆசைத்தம்பி

 தஞ்சாவூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%