தமிழ்நாடு. காம் குழுமத்தாருக்கும், வாசக உறவுகளுக்கும் வணக்கம்.
உக்ரைன் - ரஷ்யா போரை நிறுத்துவதில் தோல்வி என்ற ட்ரம்ப் அவர்களின் ஒப்புதலும், மோடி எனக்கு எப்போதும் நண்பர்தான் என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது. இது பழைய திரைப்படம் ஒன்றில் கலைவானர் அவர்கள் "ங்கொப்பன் மவனே சிங்கம்டா" என்று அழுது கொண்டே சொல்லும் நகைச்சுவையை நினைவு படுத்துகிறது.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 6 ஆம் நாளை காவலர் நாளாக அறிவித்திருப்பது அரசின் சிறந்த முன்னெடுப்புத் திட்டமாகும். காவல்துறையின் செயலூக்கம் மேலும் வலுப்பெறும் என்று நம்பலாம்.
உயர்நீதி மன்ற நீதிபதி நியமன பரிந்துரையை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது கவனம் பெறும் செய்தி. சட்டம், ஒழுங்கு மற்றும் மக்களின் நலவாழ்வுக்குப் பாதுகாப்பு resort ஆக விளங்குவது நீதிமன்றங்கள் தான். அது பிரதிநிதித்துவ அடிப்படையில் சரியான ஆளுமைகளால் வழிநடத்தப்படுவது அவசியத்திலும் அவசியம்.
கோவில் நிதியில் வணிக வளாகம் கட்டக் கூடாது என்று ஆணையிட்டிருக்கிறது நீதிமன்றம். கோவிலில் கடை விரித்திருந்த வியாபாரிகளை இயேசுவே அடித்து விரட்டியதாகத்தான் விவிலியமும் கூறுகிறது. ( மத்தேயு 21 : 12)
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமையவிருப்பது தேனினும் இனிய செய்தி. கடலோர சமுதாய இளைஞர்களின் வாழ்வு வளம் பெறும் ஒளி தெரிகிறது. கடலில் இயற்கைச் சீற்றங்களினாலும், ஸ்ரீலங்காவின் கடற் கொள்ளையர்
களாலும் சிதறடிக்கப்படும் அவர்கள் வாழ்வு வளம் பெறக்கூடும்.
இலங்கைத் தமிழர்கள் சட்ட பூர்வமாக இந்தியாவில் தங்க மத்திய அரசின் மனிதாபிமான அடிப்படையிலான அனுமதி பாராட்டத் தக்கது.
ஆர். சீதாராமன் அவர்களின் சிறுகதை "பாராட்டு விழா" அருமை. கௌரவ விரிவுரையாளர்களின் நிலையை எடுத்துரைக்கும் நேர்த்தியான representational fiction. வாழ்த்துக்கள்.
குவிந்து வரும் காதல் கவிதைகளுக்கு மத்தியில், பாவலர். கருமலைத் தமிழாழன் அவர்கள் பலவித நேர்மறை எதிர்பார்ப்புகளைச் சொல்லி இந்நிலை "என்று காண்போம்" என்று எதுகை மோனையில் ஏக்கத்தை எடுத்து வைக்கிறார். சிறந்த Utopian சிந்தனை. பாராட்டுக்கள்.
சிமிலி உருண்டையைப் பற்றிய தகவல் பலருக்கும் பயனளிப்பது உறுதி.
மீண்டும் நாளை சந்திப்போம். நன்றி.
P. கணபதி
பாளையங்கோட்டை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?