வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை: 8 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை: 8 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை



திருநெல்வேலி, அக்.21- நெல்லை மாவட்டத்தில் உவரி, இடிந்தகரை, பெருமணல், கூட்டபுளி, கூடுதாழை, கூட்டப்பனை, பஞ்சல், தோமையார்புரம், கூத்தன்குழி உட்பட 10 கடற்கரை மீனவ கிராமங்கள் அமைந்துள்ளன. இங்கு ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் நாட்டுப் படகுகள் மூலம் மீன் பிடித்து வருகின்றனர். தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தென் தமிழகம் மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது. இந்த எச்சரிக்கையை அடுத்து நெல்லை மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என ராதாபுரம் மீன். வளத்துறை அதிகாரிகள் மீனவர்களுக்கு திங்கட்கிழமை மாலை எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த எச்சரிக்கையை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் 8 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செவ்வாயன்று மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டன.

 

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%