விலகுவது ஏனோ மனிதா

விலகுவது ஏனோ மனிதா


     " வானம் மழை

       தர மறுப்பதில்லை

       சூரியனின் வெப்பக்

       கதிர்கள் வீசத்

       தயங்குவதில்லை...."


      காற்று அடிப்பதை

      நிறுத்துவதில்லை

      குளிர்ந்த நிலவு

      வராமல் இருந்ததில்லை .... "


      நட்சத்திரங்கள்

      ஜொலிக்க மறுப்பதில்லை

      வானவில் அழகை

      காட்ட தயங்குவதில்லை ..."


      பூமி சுழல்வதை

      நிறுத்துவதில்லை

      மண்வாசனை

      கிளம்பாமல்

     இருந்ததில்லை .... "


     பனியை தூவாமல்

     வானம் இருந்ததில்லை

     பறவைகள் பறக்க

     தடை போட்டவும்

     இல்லை .... "


      வானத்து தேவதை

      அழுது பார்த்ததில்லை

      பூமித்தாய்

      சிரித்தும் பார்த்ததில்லை ..."


      வானமும் பூமியும்

      சண்டையிட்டு

      நெடுந் தூரம் விலகி

      சென்றதும் இல்லை ..."


      ஆறு அறிவு

      படைத்த மனிதன்

      மட்டும் சுகம் சுமை

      நயநலம் துக்கம் ..."


      அறியாமையில்

      நித்தமும் நீந்துவது

      ஏனோ புரியாத

      புதிராய் வாழ்க்கை .... "


   - சீர்காழி. ஆர். சீதாராமன்.

      9842371679 .

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%