
"வாட்ஸப் ' காதல்...
நண்பர்கள் குழுவில் தனியே உருவாகும்
காதல்....
"முகநூல் ' காதல் முகம் பார்க்காமல் உருவாகும் காதல்....
'உறவுக் காதல்...
மாமன் மகளை கைப்பிடிக்க இருவர் மோதும் காதல்...
'ஊர் காதல்....
வழிப்போக்கில் அழகில் மயங்கி காதலிக்கும் காதல்....
'வீரக் காதல்...
அநியாயத்தை எதிர்த்து சண்டையிட்டவனை நேசிக்கும் காதல்....
"பைக் காதல்...
பைக் ரேஸில் வென்றவன் மீது உருவாகும் காதல்...
"பரிவுக் காதல்...
ஒருவன் மீது இரக்கம் கொண்டு காதலிக்கும் காதல்...
"சண்டை காதல்...
ஒருவரை ஒருவர் மோதிக்கொண்ட இடத்திலிருந்து துவங்கும் காதல்....
"கோவில் காதல்...
அம்மனை தரிசிக்க வேண்டிய இடத்தில் அம்மணியை தரிசித்ததால் உருவாகும் காதல்....
இப்படி காதல் பலவகை...
இப்படி உருவாகும் காதலை வைத்து எத்தனையோ சினிமாக்களை நம் இயக்குனர்கள் உருவாகி விட்டாயிற்று...
இனி..
"விண்வெளி ஆய்வுக்கு ஜோடியாய் போகிற வழியில் உருவாகும் காதல்....
"பயணிகள் விமானம் சிதறும் போது அதிலிருந்து இருவர் ஒரே பாராசூட்டில் தப்பி பூமி இறங்கும் போது உருவாகும் காதல்...
"தன் இறந்து போன தாய் தந்தையை ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கிய இளைஞன் மேல் உருவாகும் காதல்....
"பைக் வீலை தரையில் படாமல் ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓட்டும் வீரன் மேல் உருவாகும் காதல்...
இனி வரும் காலங்களில் காதலை....
இந்த வகையில் மையப்படுத்தி நம் இயக்குனர்கள் எடுக்க முயற்சிக்கலாமே !
எம்.பி. தினேஷ்.
கோவை - 25
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?