விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயனுடன் இராமனூத்து கிராம மக்கள் சந்திப்பு
Jul 28 2025
11

விளாத்திகுளம்
விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள இராமனூத்து. இக்கிராமத்தைச் சார்ந்த பொதுமக்கள் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயனைச் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.மனுவில் கிராமத்தில் உள்ள மாணவ மாணவிகள் ஆரம்பக்கல்வியை முடித்து உயர் கல்வியைத் தொடர சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எட்டையபுரத்திற்குப் பேரூந்து வசதி இல்லாதக் காரணத்தால் பெரும் தொகை செலவழித்து ஆட்டோக்களில் செல்ல வேண்டி உள்ளது.மேலும் விளாத்திகுளம் -கோவில்பட்டி சாலையில் உள்ள பேரூந்து நிறுத்தத்தில் அனைத்துப் பேரூந்துகளும் நிற்பதில்லை.இதனால் பொதுமக்களும் மாணவர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக வேண்டி உள்ளது. எங்கள் கிராமத்திற்குப் பேரூந்து வசதி செய்து தர வேண்டுமெனக் கோரிக்கை வைத்தனர்.கண்டிப்பாக உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என சட்டமன்ற உறுப்பினர் உறுதியளித்தார்.பள்ளித் தலைமையாசிரியர் மு.க.இப்ராஹிம் உடனிருந்தார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?