விழுப்புரம் ஊராட்சி பகுதியில் குடியிருப்பு வீடுகள் கட்டும் பணி: கலெக்டர் ஷேக் அப்துல் ஆய்வு
Aug 06 2025
104

விழுப்புரம், ஆக.4-
மத்திய, மாநில அரசுகளின் குடியிருப்பு திட்ட கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், குடியிருப்பு வீடு கட்டும் திட்டங்களின் கீழ் ஊராட்சிகளில் கட்டப்பட்டு வரும் குடியிருப்பு வீடுகளின் முன்னேற்ற பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி, மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கலைஞரின் கனவு இல்லம், ஊரக வீடுகள் மறு சீரமைப்புத்திட்டம், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா, பி.எம். ஜன்மன் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் குடியிருப்பு வீடுகளின் முன்னேற்றம் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவிப்பொறியாளர்கள், உதவி திட்ட அலுவலர்கள், பணி மேற்பார்வையாளர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும் 2024-–2025-ம் ஆண்டில் வீடுகள் கட்டுவதற்கு பணி ஆணை வழங்கப்பட்டு கட்டப்பட்டு வரும் வீடுகளின் முன்னேற்றம், 2025–-26-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட புதிய குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்த அவர், நிலுவையில் உள்ள கட்டுமானப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் பத்மஜா, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?