இப்படி ஒரு கருத்து கேள்வியைத் பார்த்தேன்...
கேள்வி நல்ல கேள்விதான்..எத்தனையோ பிரச்சனைகள் அவர்களுக்கு இருக்கும்...அது எத்தனையோ..
ஒருவரது வெளிநாட்டு வாழ்வை பக்கத்து வீட்டில் இருந்து பார்த்த என்னுடைய அனுபவமே இதனை எழுத வைத்தது...
இரண்டு பெண்குழந்தைகள்..அவருக்கு...அந்த பெண் குழந்தைகளுடன்..அந்தப்பெண் எங்க வீட்டுக்குப் பக்கத்தில் வாழ்ந்து வந்தார்..
ரொம்ப சிக்கனமான குடித்தனம்..
தனிமை ஒன்றுதான்..ஆனால் மகிழ்ச்சியாக எல்லாருடைய மதிப்பிற்கும் ஆளானாள்...
சில சமயம் சிலசலுகைகளைக்கூட பெற்றாள் இரண்டு பெண்கள் என்பதால்..
இதற்கிடையில் வருடத்திற்கு ஒருதரம்..அவரது வரவு..புது பொலிவு பெறும்...
யாரெல்லாமோ வந்து பார்க்க வருவார்கள்...இவர்களும் ஏதாவது ஒரு கிஃப்ட் கொடுத்து அனுப்புவார்கள்...ரொம்ப சந்தோஷமாக மறுபடியும் கிளம்புவார்..
அவரோட சம்பளம் எவ்வளவு என ஒரு நாள் நான் கேட்க மாதம் இருபத்தைந்து ஆயிரம் அனுப்புவார் நான் அதற்குள் செலவு செய்து மிச்சமுள்ள வைப்பேன் என்பார்..
இதில் மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்தது..ஏம்மா..இந்த இருபத்தைந்தாயிரம் இங்கு சம்பாதிக்க முடியாதா...அவர் வந்தால் இங்கேயே வேலை பார்க்க ஏற்பாடு பண்ணலாமே என்றேன்...
அவருக்கு ஏதோ மெக்கானிக்கல் வேலை போல அங்கு...
இந்த முறை வந்தபோது அவருக்கே விசாவில் ஏதோ தகராறு...அவர் சொன்ன தேதியில் போகவில்லை...
இங்கேயே சும்மா இருக்க முடியுமா..ஒரு வேலைக்குப் போறேன் என்று போனார் அதே இருபத்தைந்தாயிரம் சம்பளம்...
அவருக்குப் போக்குவரத்து செலவு...சாப்பாடு செலவு..விருந்தினர் வருகை...உறவுகளுக்குச்செய்யும் சீர் என அவருக்குக் கட்டுப்படி ஆகவில்லை...மெல்ல மெல்ல அக்குடும்பத்து சந்தோஷம் மாறியது...
அக்கம்பக்கத்து மதிப்பு உதவுயும் நின்று போனது...
ஏன் என்ற கேள்விமட்டுமே நின்றது என் மனதில்...அன்று அவர் அனுப்பும் பணத்தில் சேமிப்பு...இன்று தள்ளாட்டம்...
ஐயோ கடவுளே அவங்களுக்கு விசா கிளியர் ஆகி அவர் சவுதிக்குப் போக தினமும் நானும் இறைவனிடம் பிரார்த்தனை...
ஒருவழியாக அவருக்கு விசா சரியாயிற்று..இப்போதும் கடன் வாங்கிக் கொண்டுதான் போகிறார்..ஆனால் திரும்பவும் மகிழ்ச்சி அக்குடும்பத்தில் தொற்றிக் கொண்டது...
பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்...வெளிநாட்டு பயணங்களும் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்...
பணம் மனிதனை நிர்ணயம் பண்ணுகிறது என்பதில் சந்தேகமே இல்லை...நல்வாழ்க்கையை அதுவே தீர்மானிக்கும் நிலையில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இனி எப்போவோ...வயதான காலத்திலாவது சேர்ந்து வாழ்ந்து வாழ்வை ரசிக்கட்டும்...
Banumathi Nachiyar