-பாவலர் கருமலைத்தமிழாழன்
மனிதனன்றிப் பிறவுயிர்கள் எல்லாம் இந்த
மண்மீதில் அம்மணமாய்த் திரிந்த போதும்
இனிக்கின்ற பெண்ணினத்தை விருப்ப மின்றி
இணைவதற்கே ஆணினம்தான் முயல்வ தில்லை !
தனியாக பெண்விலங்கு இருந்த போதும்
தவறிழைக்க ஆண்விலங்கு நினைப்ப தில்லை
குனிந்துபெண்ணே இடமளித்தா லன்றி எந்தக்
கொடும்விலங்கும் வன்புணர்வைச் செய்வ தில்லை !
காட்டினிலே ஆடையின்றித் திரிந்த போதும்
கண்முன்னே புணர்உறுப்பு தெரிந்த போதும்
கேட்பதற்கே எதுவொன்றும் இல்லாப் போதும்
கேடிழைக்க எவ்விலங்கும் முயன்ற தில்லை !
நாட்டமுடன் பெண்விலங்கு இசைந்தா லன்றி
நன்குவளர் ஆண்விலங்கோ தொடுவ தில்லை
தீட்டவில்லை ஒழுக்கநெறி என்ற போதும்
தீண்டாமல் காக்கிறது ஒழுக்கப் பண்பை !
வகுத்திட்ட ஒழுக்கத்தில் முன்னோர் வாழ்ந்த
வளமான பண்பாட்டில் வளர்ந்த போதும்
பகுத்தறிந்து பார்க்கின்ற அறிவு பெற்றும்
பல்வேறு நூல்படித்த அறிவு பெற்றும்
தொகுதியாக வாழ்கின்ற விலங்கி டத்தில்
தொட்டிடாத ஒழுக்கத்தைப் பார்த்த பின்பும்
தகுதிழந்து வன்புணர்வில் கயமை செய்யும்
தரமிலானை மனிதனென்று சொல்ல லாமா !
மனிதரென்று சொல்லலாமா
பாவலர் கருமலைத்தமிழாழன்
மனிதனன்றிப் பிறவுயிர்கள் எல்லாம் இந்த
மண்மீதில் அம்மணமாய்த் திரிந்த போதும்
இனிக்கின்ற பெண்ணினத்தை விருப்ப மின்றி
இணைவதற்கே ஆணினம்தான் முயல்வ தில்லை !
தனியாக பெண்விலங்கு இருந்த போதும்
தவறிழைக்க ஆண்விலங்கு நினைப்ப தில்லை
குனிந்துபெண்ணே இடமளித்தா லன்றி எந்தக்
கொடும்விலங்கும் வன்புணர்வைச் செய்வ தில்லை !
காட்டினிலே ஆடையின்றித் திரிந்த போதும்
கண்முன்னே புணர்உறுப்பு தெரிந்த போதும்
கேட்பதற்கே எதுவொன்றும் இல்லாப் போதும்
கேடிழைக்க எவ்விலங்கும் முயன்ற தில்லை !
நாட்டமுடன் பெண்விலங்கு இசைந்தா லன்றி
நன்குவளர் ஆண்விலங்கோ தொடுவ தில்லை
தீட்டவில்லை ஒழுக்கநெறி என்ற போதும்
தீண்டாமல் காக்கிறது ஒழுக்கப் பண்பை !
வகுத்திட்ட ஒழுக்கத்தில் முன்னோர் வாழ்ந்த
வளமான பண்பாட்டில் வளர்ந்த போதும்
பகுத்தறிந்து பார்க்கின்ற அறிவு பெற்றும்
பல்வேறு நூல்படித்த அறிவு பெற்றும்
தொகுதியாக வாழ்கின்ற விலங்கி டத்தில்
தொட்டிடாத ஒழுக்கத்தைப் பார்த்த பின்பும்
தகுதிழந்து வன்புணர்வில் கயமை செய்யும்
தரமிலானை மனிதனென்று சொல்ல லாமா !
மனிதரென்று சொல்லலாமா
பாவலர் கருமலைத்தமிழாழன்
மனிதனன்றிப் பிறவுயிர்கள் எல்லாம் இந்த
மண்மீதில் அம்மணமாய்த் திரிந்த போதும்
இனிக்கின்ற பெண்ணினத்தை விருப்ப மின்றி
இணைவதற்கே ஆணினம்தான் முயல்வ தில்லை !
தனியாக பெண்விலங்கு இருந்த போதும்
தவறிழைக்க ஆண்விலங்கு நினைப்ப தில்லை
குனிந்துபெண்ணே இடமளித்தா லன்றி எந்தக்
கொடும்விலங்கும் வன்புணர்வைச் செய்வ தில்லை !
காட்டினிலே ஆடையின்றித் திரிந்த போதும்
கண்முன்னே புணர்உறுப்பு தெரிந்த போதும்
கேட்பதற்கே எதுவொன்றும் இல்லாப் போதும்
கேடிழைக்க எவ்விலங்கும் முயன்ற தில்லை !
நாட்டமுடன் பெண்விலங்கு இசைந்தா லன்றி
நன்குவளர் ஆண்விலங்கோ தொடுவ தில்லை
தீட்டவில்லை ஒழுக்கநெறி என்ற போதும்
தீண்டாமல் காக்கிறது ஒழுக்கப் பண்பை !
வகுத்திட்ட ஒழுக்கத்தில் முன்னோர் வாழ்ந்த
வளமான பண்பாட்டில் வளர்ந்த போதும்
பகுத்தறிந்து பார்க்கின்ற அறிவு பெற்றும்
பல்வேறு நூல்படித்த அறிவு பெற்றும்
தொகுதியாக வாழ்கின்ற விலங்கி டத்தில்
தொட்டிடாத ஒழுக்கத்தைப் பார்த்த பின்பும்
தகுதிழந்து வன்புணர்வில் கயமை செய்யும்
தரமிலானை மனிதனென்று சொல்ல லாமா !
மனிதரென்று சொல்லலாமா
பாவலர் கருமலைத்தமிழாழன்
மனிதனன்றிப் பிறவுயிர்கள் எல்லாம் இந்த
மண்மீதில் அம்மணமாய்த் திரிந்த போதும்
இனிக்கின்ற பெண்ணினத்தை விருப்ப மின்றி
இணைவதற்கே ஆணினம்தான் முயல்வ தில்லை !
தனியாக பெண்விலங்கு இருந்த போதும்
தவறிழைக்க ஆண்விலங்கு நினைப்ப தில்லை
குனிந்துபெண்ணே இடமளித்தா லன்றி எந்தக்
கொடும்விலங்கும் வன்புணர்வைச் செய்வ தில்லை !
காட்டினிலே ஆடையின்றித் திரிந்த போதும்
கண்முன்னே புணர்உறுப்பு தெரிந்த போதும்
கேட்பதற்கே எதுவொன்றும் இல்லாப் போதும்
கேடிழைக்க எவ்விலங்கும் முயன்ற தில்லை !
நாட்டமுடன் பெண்விலங்கு இசைந்தா லன்றி
நன்குவளர் ஆண்விலங்கோ தொடுவ தில்லை
தீட்டவில்லை ஒழுக்கநெறி என்ற போதும்
தீண்டாமல் காக்கிறது ஒழுக்கப் பண்பை !
வகுத்திட்ட ஒழுக்கத்தில் முன்னோர் வாழ்ந்த
வளமான பண்பாட்டில் வளர்ந்த போதும்
பகுத்தறிந்து பார்க்கின்ற அறிவு பெற்றும்
பல்வேறு நூல்படித்த அறிவு பெற்றும்
தொகுதியாக வாழ்கின்ற விலங்கி டத்தில்
தொட்டிடாத ஒழுக்கத்தைப் பார்த்த பின்பும்
தகுதிழந்து வன்புணர்வில் கயமை செய்யும்
தரமிலானை மனிதனென்று சொல்ல லாமா !