வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோவிலில் 600 மாணவர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட ஐகிரி நந்தினி பாராயணம்!
Dec 09 2025
40
வேலூர்,டிச.10-
வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயிலில் 600 மாணவர்கள் பங்கேற்ற பிரம்மாண்டமான ஐகிரி நந்தினி பாராயணம் நடந்தது. ஸ்ரீ சக்தி அம்மாவின் 50 ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு இசையமுது நடந்தது. வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இணைந்து ஸ்ரீ சக்தி அம்மாவிற்கு தெய்வீக இசை அமுது படைக்கும் விதமாக அருள்மிகு ஸ்ரீ சக்தி அம்மாவின் முன்னிலையில் பிரம்மாண்ட ஐகிரி நந்தினி ஸ்லோகம் பாராயணத்தை நிகழ்த்தினர் .ஸ்ரீபுரம் பொற்கோயில் வளாகத்தில் உள்ள திறந்தவெளி அரங்கில் நடைபெற்ற இந்த விழாவுக்கு ஸ்ரீபுரம் பொற்கோவில் மற்றும் ஸ்ரீ நாராயணி பள்ளிகளின் அறங்காவலரும், இயக்குநருமான டாக்டர் எம் .சுரேஷ் பாபு தலைமை வகித்தார். இந்த சிறப்பு நிகழ்ச்சியில் ஸ்ரீ சக்தி அம்மாவின் நீண்ட நாள் வெளிநாட்டு பக்தர்களும் கலந்து கொண்டு மாணவர்களின் ஆன்மிக பாராயணத்தை கண்டு மகிழ்ந்தனர் .விழாவில் 600 மாணவர்கள் ஒரே நேரத்தில் ஒருங்கிணைந்து தேவி துதியை முழு பக்தியுடன் பாடியது காண்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஸ்ரீ சக்தி அம்மாவின் பொன்விழாவை போற்றும் வகையில் ஒரு உன்னதமான ஆன்மிக காணிக்கையாக இந்த பிரம்மாண்டமான பாராயண நிகழ்வு அமைந்திருந்தது. இந்த சிறப்பு நிகழ்வில் ஸ்ரீ நாராயணி பள்ளிகளின் முதல்வர்கள், துணை முதல்வர்கள், நிர்வாக அலுவலர் மற்றும் இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?