ஆற்றல் கொண்டதும் தீயே
அழிவைக் கொண்டதும் தீயே
போற்றத் தக்கதும் தீயே
பொலிவைக் கொண்டதும் தீயே!
சக்தி கொண்டதும் தீயே
சாற்றத் தக்கதும் தீயே
பக்திக் குரியதும் தீயே
படிமம் கொண்டதும் தீயே!
கற்கள் காதலே தீயே
கற்கள் உரசினால் தீயே
பொற்பாய் அமைவதும் தீயே
புகழின் விளிம்புமே தீயே!
பெண்ணை நெருங்கினால் தீயே
பீடு நிறைந்ததும் தீயே
மமண்ணை ஆள்வதும் தீயே
மாண்பு மிக்கதும் தீயே!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*
திருவண்ணாமலை.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%