ரதம் அதில் அநியாயத்தை
வதம் செய்த இறைவன் அமர்ந்திருக்க ஆடி ஆடி அசைந்து அசைந்து வருகுதே தேர் .
பக்தர்களும் பரவசத்துடன் சக்தியுடன் தேர் வடம் பிடித்து இழுக்க ஆடி ஆடி அசைந்து வருகுதே தேர்
முக்காலம் உணர்ந்த கடவுள்
எக்காலமும் காப்பேன் என்று அருள்பாலிக்க ஆடி ஆடி அசைந்து வருகுதே தேர்
சாலையில் தேர் அசைந்து அசைந்து வந்ததால் சாலையே சோலையாய் மாறி மலர்களின் வாசம்
வீசுகிறதே ..
அங்கு வாசத்துடன் பக்தர்களின் நேசமும் சேர கடவுளும் மனிதனும் சங்கமிக்கும் ஒரு சங்கமாக அமைந்ததே தேர்.
அசைந்து வரும் தேரில் ஒய்யாரமாக அமர்ந்த கடவுளுக்கு தான் என்னே
மகிழ்வு
சாலையில் வரும் பார் போற்றும் தேரினை ரசிப்போம் கடவுளின் ஆசிகளை பெறுவோம்.
உஷா முத்துராமன்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?