விருதுநகர், ஜன.
விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் 45 வயதுக்கு மிகா மலும், இதர வகுப்பினர் 40 வயதுக்கு மிகா மலும் இருத்தல் வேண்டும். தங்களது பெய ரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு இருத்தல் வேண்டும். மேலும், கல்வித் தகுதியினை பதிவு செய்து 5 ஆண்டு நிறைவடைந்திருப்ப தோடு, குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தோல்வியுற்றவருக்கு மாதம் ரூ.200, தேர்ச்சி பெற்றவருக்கு மாதம் ரூ.300, பிளஸ் 2 மற்றும் பட்டயப்படிப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ.400, பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ.600 என 3 ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும். விண்ணப்பங்களை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திலோ அல்லது www. tnvelaivaaippu.gov.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்தோ பூர்த்தி செய்து வருவாய் ஆய்வாளரிடம் கையொ ப்பம் பெற வேண்டும். அத்துடன், வேலை வாய்ப்பு அடையாள அட்டை, அனைத்து அசல் சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்குப் புத்தகம் ஆகியவற்றுடன் அலுவலக வேலைநாட்களில் விண் ணப்பத்தினை விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த உதவித் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற கல்வித் தகுதியினை பதிவு செய்து ஓராண்டு நிறைவடைந்திருந்தால் போது மானது. மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை பெற்று வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தி ருத்தல் வேண்டும். வருமான உச்சவரம்பு கிடையாது. பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் பதிவு செய்தவர்களுக்கு மாதம் ரூ.600, மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்ற வர்களுக்கு மாதம் ரூ.750, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம்ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும். வயது உச்சவரம்பின்றி 10 ஆண்டு வரை மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை பெறலாம். மேலும், உதவித் தொகை பெற்றால் வேலைவாய்ப்பு எந்தவிதத்திலும் பாதிக் கப்படாது. அதேவேளை, தினசரி பள்ளி, கல்லூரி செல்பவராகவோ, சுய தொழில் செய்பவராகவோ, அரசிடமிருந்து வேறு உதவித்தொகை பெறுபவராகவோ, ஊதி யம் பெறும் பணியிலோ இருத்தல் கூடாது. மாற்றுத்திறனாளி பயனாளிகள் தொட ர்ச்சியாக உதவித் தொகை பெற சுய உறுதிமொழி ஆவணத்தை ஆண்டுதோறும் சமர்ப்பித்தல் வேண்டும் என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.