*கந்தசஷ்டி விழாவில் 108 பால்குடம் எடுத்தல் வைபவம்...!*

*கந்தசஷ்டி விழாவில் 108 பால்குடம் எடுத்தல் வைபவம்...!*


வந்தவாசி, அக் 28;


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி இரட்டைவாடை செட்டித் தெருவில் உள்ள அருள்மிகு சுந்தர மூர்த்தி விநாயகர் ஆலயத்தின் உட்புறம் அமைந்துள்ள முருகப் பெருமானுக்கு கந்தசஷ்டி விழாவையொட்டி 108 பால்குடம் எடுத்தல் வைபவம் நடந்தேறியது. இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடத்தை தலையில் ஏந்தியபடி வெற்றிவேல் முருகனுக்கு அரோரா என்ற கோஷத்துடன் கோவிலை மூன்று முறை வலம் வந்து முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்தனர். பிறகு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தேறியது. பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.


பா. சீனிவாசன், வந்தவாசி.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%