
அறுசீர் மண்டிலம்.
வாழ்க்கைக் கப்பலைக்
கடக்க
வளமும் செழிப்பும்
வேண்டும்
ஆழ்ந்த அறிவைப்
பெறவே
அகன்ற கல்வி
வேண்டும்!
சூழ்ந்த இருளைப்
போக்க
சேர்ந்த ஒளியே
வேண்டும்
மூழ்கும் கடலைக்
கடக்க
மேன்மைக் கப்பல்
வேண்டும்!
திட்டம் சரியாய்
இருந்தால்
தேனாய் நன்மை
சுவைக்கும்
சட்டம் நலமாய்
அமைந்தால்
சாந்தாய் நன்மை
கிடைக்கும்!
எட்டுத் திக்கின்
செயல்கள்
ஏற்றிப் போற்றிக்
காக்கும்
தொட்டுக் கடலைத்
தாண்ட
தோணி வேண்டும்
யாண்டும்!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%