கடையேழு வள்ளல்கள் புகழைப் பாடு.!

கடையேழு வள்ளல்கள் புகழைப் பாடு.!


*பேகன்.*

மழையால் ஆடிய மயிலுக்கு.. குளிரால் ஆடுதே எனநினைத்து..

போர்வை போர்த்திய உயிர்நேயன்.. உலகினில் அவன் பெயரே பேகன்.!


*பாரி.*

கொல்லையிலே படர்ந்திட்ட முல்லைக்கொடி.. கொம்பின்றி வாடிய நிலைகண்டே.. எல்லையில்லா அன்புடையோன்.. பாரி வள்ளல்.. ஏறிவந்த தேர்தன்னை தந்தான் வாழி!


*காரி.*

இருப்பதெல்லாம் அனைவருக்கும் எடுத்துத் தந்தே..ஏழையர்க்கே செல்வத்தை அள்ளித் தந்தே... குதிரையினை கொடையாக கொடுத்தான் காரி. குடைநிழலைப் பாடுகிறோம் வளால் வாழி.!


*ஆய்.என்ற ஆணடிரன்*

பைநாகம் பரிந்தளித்த அரிய ஆடை.. பக்திநெறி தவறாது ஈசனுக்கே.. மெய்யன்பில் அளி்த்தானே ஆய் எனும் வள்ளல்.. அவன் புகழைப் பாடிடுவேன் அழகுத் தமிழ் சொல்லில்.!


*அதியமான்.*

தகடூரின் தமிழ் வள்ளல்..கருமலையின் அதிபதியாம்.. நெடுநாள் உயிர் வழங்கும் அருநெல்லிக் கனியை.. தானுண்டால் என்னபயன்? தமிழ் நீடு வாழ தாய்அவளே அவ்வைக்கு.. புதிய வான் போல் பொழிந்தான் அதியமான் என்னும் வள்ளல்.!  


*நள்ளி.*

வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல்.. வாஞ்சையுடன் வழங்குவது யார் என்று அறியாதே.. உளது எல்லாம் வறியவர்க்கு உவந்தளித்தான் ஒரு வள்ளல்.. உலகத்தில் அவன் பெயரோ நள்ளி என்னும் பெருந்தகையாம்!


*ஓரி.*

சொற்போரில் வல்லவர்க்கு.. புலவருக்கு.. சொற்றமிழில் திறனுடைய பாணருக்கு.. விற் போரில் வித்தகனாம்.. ஓரி வள்ளல்.. உவந்தளித்த செல்வமோ மலையின் பெரிது! உயிர் தமிழில் அவன் கொண்ட காதல் அரிது.!


இவ்வேழு வள்ளல்கள் இருந்த நாடு! எமது உயிர் தமிழ் நாடு என்றே பாடு.! கடையேழு வள்ளல்கள் பெருமை பாடு.. கவிதைக்கே மணிமகுடம் என்று சூட்டு!


*வே.கல்யாண்குமார்.*

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%