
ஏதோவொரு வரிசைப்படி
அமுது புகட்டி
உறங்க வைத்து விடுகிறாய்
சொற்களை.
கனவு காணும் அவற்றின்
மூடிய விழிகளின் அசைவில்
நெருங்கி
புரண்டு படுக்கும்
நெளிவுகளை ரசித்து
மௌனமாய்க் கிடக்கும்
அவற்றின் நிசப்தத்தில் மூழ்கி
என் உறவையும்
உறவின்மையையும்
காட்டிக் கொள்கிறேன்
அச்சொற்களின் கீழே
அறிதுயிலில் படுத்திருக்கும்
உன் பெயரோடு.
-கீர்த்தி
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%