“தோல்வியால் துவண்டு விடக் கூடாது!” - அண்ணாமலை அறிவுரை

“தோல்வியால் துவண்டு விடக் கூடாது!” - அண்ணாமலை அறிவுரை

புதுக்கோட்டை:

கீரனூர் அருகே நடைபெற்று வரும் துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பதக்கம் வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே ஆவாரங்குடிப்பட்டியில் தமிழ்நாடு துப்பாக்கி சுடும் சங்கம் மற்றும் புதுக்கோட்டை ராயல் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி கடந்த 22-ம் தேதியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.


வரும் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியை பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை வழங்கி, பாராட்டினார்.


பின்னர் அவர் பேசியதாவது: விளையாட்டு வீரர்கள் படிப்பிலும் கவனம் செலுத்திக்கொண்டு விளையாட்டிலும் திறம்பட வளர வேண்டும். தோல்வி வந்துவிட்டது என்பதற்காக துவண்டு விடக்கூடாது. தோல்வி ஒரு நாள் வெற்றியாக மாறும். அதுவரை நாம் தொடர்ந்து பயிற்சி எடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்றார்.




பதக்கத்தை கையில் வாங்கிய டிஆர்பி.ராஜா மகன்: வெற்றி பெற்ற அனைவருக்கும் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, பதக்கங்களை கழுத்தில் அணிவித்து வந்த நிலையில், அமைச்சர் டிஆர்பி.ராஜாவின் மகன் சூரிய ராஜ பாலு கழுத்தில் அணிவிக்க மறுத்து, கையில் வாங்கிக் கொண்டார். பின்னர், அண்ணாமலையுடன் சேர்ந்து நின்று படம் எடுத்துக் கொண்டு சென்றார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%