*விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவோம் - விழிப்புணர்வு நிகழ்ச்சி.*
Oct 17 2025
15

இராமநாதபுரம், கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (17.10.2025) தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவோம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளியில் தலைமை ஆசிரியர் திரு நாகராஜன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் சாயல்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய நிலை அலுவலர் திரு ஆறுமுகம் அவர்கள், திரு பூபதிராஜன் அவர்கள் மற்றும் பல தீயணைப்பு வீரர்களும் கலந்து கொண்டு விபத்தில்லா தீபாவளியாக இருப்பதற்கு கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் ஆடைகளில் தீ பற்றினால் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் பற்றி மிக விரிவான விழிப்புணர்வு உரையாற்றினர்.
இந்நிகழ்வில் பட்டதாரி தமிழாசிரியர் திரு சக்திகுமார் அவர் வரவேற்று பேசினார் இறுதியில் தொழிற்கல்வியாசிரியர் திரு சொக்கர் அவர்கள் நன்றியுரையாற்றினார். இதில் அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?