15 லட்சத்திற்கும் அதிகமான பாலஸ்தீனர்களுக்கு “அவசர உதவி” தேவை - ஐ.நா.
Oct 28 2025
27
காசாவில் குறைந்தபட்சம் 15 லட்சம் பாலஸ்தீனர்களுக்கு “அவசர உதவி” தேவைப்படுகிறது என ஐ.நா அவை தெரிவித்துள்ளது. காசாவில் இடைக்காலப் போர் நிறுத்தம் அமலாகியுள்ள நிலையில் மக்கள் தங்கள் வீடுகள் இருந்த இடத்தை பார்க்க செல்கின்றனர். அவர்கள் செல்லும் வழியெல்லாம் இஸ்ரேல் ராணுவத்தால் குண்டு வீசி அழிக்கப்பட்ட இடிபாடுகளை மட்டுமே பார்க்கின்றனர். இடைக்கால போர் நிறுத்தம் அமலாகி இருந்தாலும் ஐநா அவையின் நிவாரண வாகனங்கள் போதுமான அளவுக்கு உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து உதவிகளை செய்ய விடாமல் தடுத்து வருகிறது. இதனால் பாலஸ்தீனர்களின் பசிக்கு உணவளிக்க முடியவில்லை. அவர்களின் ஊட்டச்சத்து குறைபாடு மேலும் மேலும் தீவிரமடைகிறது. உணவு மற்றும் தண்ணீரைக் கண்டுபிடிப்பதற்கான தொடர்ச்சியான போராட்டத்தை மட்டுமே பாலஸ்தீ னர்கள் எதிர்கொள்வதாக தெரிவிக் கப்பட்டுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?