23 சட்டமன்றத் தொகுதிகளில் ரூ.69 கோடியில் சிறு விளையாட்டு அரங்கங்கள்: ஸ்டாலின் அடிக்கல்
Dec 10 2025
23
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் தமிழ்நாட்டின் 23 சட்டமன்றத் தொகுதிகளில் 69 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 23 முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கங்கள் கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
தற்போது மூன்றாவது கட்டமாக 44 சட்டமன்றத் தொகுதிகளில் முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கங்கள் அமைத்திட மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் – பர்கூர் மற்றும் தளி, தஞ்சாவூர் மாவட்டம் - பேராவூரணி, திருவையாறு மற்றும் ஒரத்தநாடு, கோயம்புத்தூர் மாவட்டம் - கிணத்துக்கடவு, திருச்சி மாவட்டம் – மணப்பாறை, விழுப்புரம் மாவட்டம் - செஞ்சி, திண்டிவனம் மற்றும் திருக்கோவிலூர்,
சென்னை மாவட்டம் - மதுரவாயல், திரு.வி.க.நகர் மற்றும் பெரம்பூர், விருதுநகர் மாவட்டம் – திருச்சுழி மற்றும் ராஜபாளையம், காஞ்சிபுரம் மாவட்டம்- திருப்பெரும்புதூர், திருவாரூர் மாவட்டம் – நன்னிலம் மற்றும் திருத்துறைபூண்டி, கரூர் மாவட்டம் – குளித்தலை,
செங்கல்பட்டு மாவட்டம் – ஆலந்தூர், கன்னியாகுமரி மாவட்டம் - கிள்ளியூர், சேலம் மாவட்டம் - சங்ககிரி மற்றும் எடப்பாடி சட்டமன்ற தொகுதிகளிலும், என மொத்தம் 23 சட்டமன்றத் தொகுதிகளில் 69 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கங்கள் அமைப்பதற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கில் தடகளம், கால்பந்து, கூடைப்பந்து, கையுந்துபந்து, கபாடி மற்றும் அந்தந்த பகுதிகளில் உள்ள பிரபலமான விளையாட்டுகள் உட்படகுறைந்தபட்சம் ஐந்து முக்கியவிளையாட்டுக்களுக்கான வசதிகளுடன் இவ்விளையாட்டரங்கம் அமைக்கப்பட உள்ளது.
இந்நிகழ்வில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, ஊராட்சித் துறை ஆணையர் பா.பொன்னையா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?