95% சேவை மீட்டெடுப்பு: இண்டிகோ அறிவிப்பு!

95% சேவை மீட்டெடுப்பு: இண்டிகோ அறிவிப்பு!


 

இண்டிகோ சேவை படிப்படியாக மீட்டெடுக்கப்பட்டு வருவதாக அறிவித்துள்ளது.


இண்டிகோவின், நாடுதழுவிய சேவை பாதிப்பால் 6 நாள்களாக விமானங்கள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வருகின்றன. கடந்த வியாழக்கிழமை 550 விமானங்கள், வெள்ளிக்கிழமை 1,000-க்கும் சனிக்கிழமை 800-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.


இந்த நிலையில், இண்டிகோ சேவை மீட்டெடுக்கப்பட்டு வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. சனிக்கிழமையில் 113 இடங்களுக்கு 700 விமானங்களை இயக்கிய நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலைக்குள் 1,500-க்கும் அதிகமான சேவை உயர்ந்துள்ளதாக அறிவித்துள்ளது.


138 இடங்களில் 135 இடங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில், 95 சதவிகித சேவை இணைப்பு மீட்கப்பட்டதாக அறிவித்துள்ளது.



கொல்லத்தில் தீ விபத்தில் 10 மீன்பிடி படகுகள் எரிந்து நாசம்

 

கொல்லத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 10 மீன்பிடி படகுகள் எரிந்து நாசமாகின.


கேரள மாநிலம், கொல்லத்தில் உள்ள அஷ்டமுடி ஏரியில் நங்கூரமிட்டிருந்த மீன்பிடி படகுகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ மேலும் பரவாமல் இருக்க உள்ளூர் மக்களும் தீயணைப்புப் படையினரும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.


முதற்கட்ட தகவலின்படி, சுமார் 10 படகுகள் முற்றிலுமாக எரிந்து நாசமாகின. தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆனால் எரிவாயு சிலிண்டர் வெடித்ததாக சந்தேகிக்கப்படுகிறது என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

இருப்பினும் இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. அஞ்சலுமூட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குரேபுழா பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. தீ விபத்து குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அங்கிருந்த மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%