tamilnadu epaper

அது ஒரு காலம் ....

அது ஒரு காலம் ....

அமோகமாக விளைஞ்சது ...
அது ஒரு காலம்..
 
அடுக்கடுக்காய் மூட்டைகள் 
அடுக்கி வச்சது...
அது ஒரு காலம் 

களத்து மேட்டில் தானியங்கள்....
மலை போல் குவிந்து கிடந்தது...
அது ஒரு காலம்

நெல் கட்டுகள் சுமந்து
களத்தில் அடிக்கி வச்சது 
அது ஒரு காலம் 

மனுசங்க உழைச்சு 
மனுஷங்க அறுவடை செஞ்சது 
அது ஒரு காலம்

 காலம் தவறாது
 மழை கொட்டி கம்மாய்  நிறைந்தது 
அது ஒரு காலம் 

விவசாயம் செஞ்சு
வீடு கட்டினது... விளைச்சல் பெருக்கி ...
வண்டி மாடு வாங்கியது...
அது ஒரு காலம் 

ஊர் மடத்தில் உட்கார்ந்து கொண்டு 
அது ஒரு காலம் பற்றி ...
அசைபோடும் பெரிசுகள் ...
விவசாயத்தை விடு என ...
ஒருபோதும் சொல்வதில்லை...!

கவிஞர் 
ரெட்டியபட்டி எஸ் மணிவண்ணன்