அன்பாலே வென்றிடு! அகிலமுன் காலடியில்!
அரவணைக்கும் மனமேதான் ஆளுகின்ற திறனாகும்!
இன்பமும் மகிழ்ச்சியும் இயல்பாகக் கூடிடும்!
ஈந்துவக்கும் உள்ளமே இறைவனின் இல்லமாம்!
துன்பமதை நீக்கிடும் துயரெல்லாம் போக்கிடும்!
தூயநல் அன்பினைத் தொழுது நீ போற்றிடு!
நன்மைகள் பெருகிடும் நலமுனைச் சேர்ந்திடும்!
நாளுமே வாழ்விலே ஆனந்தப் பூமழையே!
ஓசூர் மணிமேகலை