சாமி நமது காவலன்
அவனே நமது தூதுவன்
அவனிடம் வரம் பெற்று
வாழ்வோம் நெறி கெட்டு...
மலை உச்சியில் இருக்கும் தெய்வத்தின் அருளில் இருப்போம்...
தன்னுடம் இருக்கும் தெய்வம் அம்மா,அப்பாவை இருளில் வைப்போம்...
நீ உலகிற்கு காட்டிய தெய்வம் தெய்வம் பெரிதா...?
இல்லை உன்னை உலகிற்கு காட்டிய தெய்வம் பெறிதா...?
கடவுளை பார்க்க வேண்டும்...
தாய், தந்தையை காக்க வேண்டும்...
கல்லான கடவுளுக்கும் மேல்
உன்னை கண்டெடுத்த கடவுள்...!!
-பொன்.கருணா
நவி மும்பை