சினிமாத் துறைக்கு வருவோரை
அங்கிருந்து நான்கு கால் பாய்ச்சலில்
பாய்ந்தோட பலவகையிலும் மூத்தோர் முயற்சிப்பர்
கேவலமாய் சித்தரிப்பர்
பிறர் எள்ளி நகையாட
அவமானப் படுத்துவர்
தனது நோக்கத்தில்
தளராத பக்குவமும்
உடும்புப் பிடியும்
கொண்டிருப்பின் வெற்றி
முத்திரை நிச்சயம்.

-பி. பழனி,
சென்னை.