சீருடை சிறுவர்களை செதுக்கியவர்களே..
சுவற்றில் எழுதி எழுதி பல வரலாறு படைத்தவர்களே...
கால் வலிக்க தரையில் நின்று கடமையை தவராமல் செய்தவர்களே
...
சுயநலம் பாராமல் சொற்பொழிவு ஆற்றியவர்களே....
ஊதியத்தை மட்டும் கண்ணில் கண்டவர்களே...
ஊழல் என்னவென்றே தெரியாதவர்களே....
பல மேதைகளை படைத்து விட்டு ...
பாவமாய் வாழ்பவர்களே
...
உன்னை மிஞ்சிய ஆற்றல் எவருக்குமுண்டோ...
உன்னிடம் பயிலாமல் சாதனை படைத்தவருமுண்டோ...
ஆசிரியர் பெரும் மக்கள்
போற்றபட வேண்டியவர்கள்...
பொக்கிசமாய் காக்கப்படவேண்டியவர்கள்...!!
-பொன்.கருணா
நவி மும்பை