இனிப்பின் ருசி ரசிக்க முடியுமென்றால்
மனதில் அது நிறைய மகிழ்வை தருவது உண்மை .
தேன் மிட்டாய் தட்டில் ஒளிர்கிறது,
சுவைக்கு கிடைத்த நல்ல ருசியென நாக்கு சொல்கிறது.
லட்டு சக்கரை மழை பொழிகிறது,
ஜிலேபி சுருள் உலகம் சுற்றுகிறது.
பால்கோவா மெல்லிசை பாடுகிறது,
மைசூர்பாக் மனதை மயக்கும் என்பதெல்லாம் நூற்றுக்கு நூறு உண்மையே.
இனிப்பு சுவை ஆசையாய் தித்திக்க,
மனநிறையுடன் இனிப்பை ருசித்து புன்னகைப்போம்.
சாதாப் பொங்கல் கொஞ்சும் உவகை,
சர்க்கரையை போலே இனிக்கும் நேரம்.
தொட்டால் கரையும் பாயசம் போல,
நம் மனதில் இனிப்பு நினைவுகள் பல.
சுவைக்கான மயக்கம் எந்நாளும் தொடர்க,
இனிப்பு தினமும் மனதில் நிற்க.
உஷா முத்துராமன்