நடப்பன பறப்பன ஊர்வன
அனைத்தும் இயற்கையோடு
ஒன்றிடின் வாழ்வு நலம்...
நடக்கும் மனிதனும் தன்
நலம் விரும்பி தனக்காக
இடித்தான் மலைகளை தினம்...
மரங்களை அழித்தான்
வீடுகளைப் படைத்தான்
அழிவையே கண்டான் முடிவில்...
யோசித்தான்... யோசித்தான்
மலைப் பாறைகள் இரண்டின்
இடையில் அமைத்தான் வீடு...
அரண் போன்ற பாதுகாப்பு
இயற்கை செயற்கை இணைந்து
இரண்டிலும் வாழ்வது சுகம்...
இயற்கையை அழிக்காமல்
இயற்கையோடு ஒன்றுவது
யாருக்கும் அழிவில்லை
உணர்ந்தால் மனிதன்
உயர்வான் அவனே...!
- துரை சேகர்
கோவை.