இது என்னப்பா கொடுமை இப்படி தீர்ப்பு வந்திருக்கு, நாம அப்படி யாருக்கு என்ன தீங்கு செய்தோம் என்று புலம்பி கண்ணீர் வடித்தாள் ரவியின் தாய்" />
tamilnadu epaper

இருமுகம்

இருமுகம்


   " இது என்னப்பா கொடுமை இப்படி தீர்ப்பு வந்திருக்கு, நாம அப்படி யாருக்கு என்ன தீங்கு செய்தோம் என்று புலம்பி கண்ணீர் வடித்தாள் ரவியின் தாய் ராஜம்.


     ரவி கம்பெனியில் நைட் சிஃப்ட் வேலை பார்க்கும் நல்ல உழைப்பாளி . அழகான குடும்பம் ரவியின் மனைவி மஞ்சுளா இரண்டு பெண் பிள்ளைகள் .


      ராஜம் புலம்பலுக்கு காரணம் இல்லாமல் இல்லை ரவிக்கு நைட் வேலை பகலில் ரெஸ்ட் எடுத்து விடுவான் . தாம்பத்தியம் கொஞ்சம் கானல் நீர் தான் .... "


         .இதனால் மஞ்சுளா கள்ள காதல் வைத்துக் கொண்டு இரவோடு இரவாக ரவி வேலைக்கு சென்ற நேரத்தில் ரகுவோடு ஊரை விட்டே ஓடிவிட்டாள்.


      மனம் தாங்காத ரவி தாய் ராஜம் வழக்கு தொடர்ந்தாள் ஆனால் தீர்ப்பு மஞ்சுளாவிற்கு சாதகமாக தான் வந்தது தான் .


       கலிகாலம் பெண் இனம் எப்படி எல்லாம் சீரழிகிறது, இந்த நீதித்துறை ஏன் இப்படி கண்மூடித்தனமாக தீர்ப்பு வழங்குகிறது இரண்டு பெண் பிள்ளைகளை எப்படி ஒரு தனி ஆண் பாதுகாத்து ஆளாக்க முடியும் என்று அழுது ஒப்பாரி வைத்தாள் ராஜம் .


      " ஊர் உலகத்துல நடக்காதது எதுவும் புதுசா நடந்து விடவில்லை , இப்படி கள்ளக் காதலனோடு குடும்ப பெண்கள் ஓடுவது சகஜமாகி விட்டது .


      முடிந்த விசயத்தை மீண்டும் மீண்டும் கிளராதே ஆக வேண்டிய வேலையைப் பாரு , ஒரு பாட்டியா உன்னால முடிஞ்சதை பேத்திகளுக்கு செய்து வா மீதியை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றான் ரவி. 


      இரு பெண் பிள்ளைகளையும் மார்பிலும் தோளிலும் சுமந்தான் ரவி.


       மஞ்சுளா சென்ற நாள் முதல் அப்பாவாக என்பது ஒரு புறம் இருந்தாலும் , ரவி இரண்டு பெண் பிள்ளைகள் அக்கறையில் முழுமையான அம்மாவாக மாறித்தான் போனான் ....."


 - சீர்காழி. ஆர். சீதாராமன்.

   9842371679 .