"கண்ணில் மச்சம் இருந்தால் கூட," />

tamilnadu epaper

கண்திருஷ்டி

கண்திருஷ்டி


கண்ணடி படுகிறதோ இல்லையோ, கண்ணில் கருணை வேண்டும் .

"நீர்வார் கண்ணை", என்ற சொற்கள் என்னை மீண்டும் மீண்டும் மற்றவர் கண்களைப் பார்க்கத் தூண்டும்.


"கண்ணில் மச்சம் இருந்தால் கூட, அவர்கள் மென்மையானவர்கள்" என்பார்கள். இதுபோல் எத்தனையோ!!!


"கண்களில் திருஷ்டி அதாவது பார்வை இருந்தால்தான் கண்களுக்கே பெருமை", இல்லையெனில், கண்களைப் பெற்றதால் என்ன பயன்?"


கிராமத்தில் பிறந்ததால், அங்கு கண்திருஷ்டி பற்றியெல்லாம் நிறைய நம்பிக்கை உண்டு. வியாழன், "ஞாயிறு கிழமைகளில் எங்களையெல்லாம் உட்காரவைத்து சுற்றிப் போடுவார்கள்". "எனக்கு நம்பிக்கை இல்லை", என்றாலும் "அவர்களின் நம்பிக்கைக்கு மறுப்பு சொல்ல மாட்டேன்".


"சோளக்காட்டில் ஒரு பொம்மை, ஜோடி சேர்த்ததா உன்னை?", என்ற பாடல் அந்த சோளக்காட்டில் நிற்கும் பொம்மையைக் கண்முன் நிறுத்தும்.


"எதற்காக இப்படி வைத்திருக்கிறார்கள்?" என்று கேட்டால் ,"வயலுக்குத் திருஷ்டி வரக்கூடாது என்று"!, என்பார்கள்.


நாங்கள் பிஸினஸ் செய்து கொண்டிருந்த பொழுது, எல்லாரும் "உங்கள் வீட்டிலும் ஒரு திருஷ்டி பொம்மை மாட்டுங்கள்", என்றார்கள். 


"எல்லார் வீட்டு வாசலிலும் ஏதோ ஒரு விதத்தில் ஒரு திருஷ்டி பொம்மை இருக்கும்".


"என் தங்கைக்கு இதில் அதிக நம்பிக்கை. அவள் ஒரு படத்தை வாங்கி நம்ம வீட்டுக்குள்ள வர மாதிரி மாட்டு", எனச் சொல்லி மாட்டி வைத்தோம்.


"சூரியன் போன்று ஒரு பித்தளையில் கொடுக்க அதையும் மாட்டினோம்."


இவருக்கு அதில் எல்லாம் நம்பிக்கை கிடையாது.


 "முதன்முதலில் திருஷ்டி பொம்மை ஒன்று வாங்கி வாருங்கள்!", என்றபோது ஒரு படத்தை வாங்கி வந்தார். அதில் "என்னைப்பார் யோகம் வரும்", என்று எழுதிய‌ ஒரு கழுதை படம் .


"இது எப்படி திருஷ்டி போக்கும்?", என கேட்டால்," கழுதை பார்த்துக்கொள்ளும்", என்றார்.


"இது சரிப்படாது", என்று அவரைத் தொணதொணத்து, "வேறு படம் வாங்கி வாருங்கள்" என்று சொல்ல, 

"ஒரு குபேரர் படம், அதுவும் சீன பாணியில் இருக்க, ஐயோ! இது ஆகாது", எனச் சொல்லி, எல்லோரும் அவரை கேலி செய்தோம்.


அடுத்து "ஒரு மண்ணாலான பற்கள் தெரிய சிரிக்கின்ற ஒரு பொம்மை வாங்கி வந்தார்".


" இதனை எங்கு மாட்டுவது?" என சொல்ல, மாடியின் பாரப்பட் வாலில் மாட்ட, வேகமாக ஏறி, மாட்டிய சிறிது நேரத்தில் கீழே விழுந்து உடைந்தது. "திருஷ்டி கழிந்தது" என்றார்.


அடுத்து அதுவும் சரியல்ல, "ஏதாவது நல்ல திருஷ்டி படம் வாங்கிகிட்டு வாங்க", என்று சொல்ல," ஒரு மண்சட்டியை வாங்கி வந்தார்".


 "கருப்பும் வெள்ளையுமாக கலர் பெயிண்ட்டும் வாங்கி வந்தார். இது எதற்கு?" என கேட்க "நீ தான் நல்லா டிராயிங் வரைவியே! அதனால் இதில் கரும்புள்ளி வெண்புள்ளிகள் வைத்துவிட்டு மாட்டினால் திருஷ்டிப்படமாக மாறிவிடும் ",என்றார்.


"ஆமாம் எங்க ஊரில் சோளக்காட்டில் ஒரு பொம்மை ஒன்று இருக்கும். உங்கள் மேலாடை சட்டையும், பேண்டடையும் மாட்டிவிட்டு, வைக்கோல் போர் கொஞ்சம் அடைத்தால், அசல் உங்களை மாதிரியே இருக்கும்!" எனச் சொல்ல "இது வித்தியாசமாக இருக்குமே!" என்றார்.


"இதெல்லாம் சரி வராது", என்று சொல்லி கடைசியில் என் தங்கை "திருஷ்டி கணபதி", என்ற இந்தப் படத்தை வாங்கி கொடுத்து மாட்டி வைத்தோம்.


"ஆனால் ஒருமுறை எங்கள் வீட்டிற்கு வந்தவர் கண்பட்டு, ஒரு மரமே பட்டுப் போனது. அது என்னவோ உண்மைதான்.


நம்பிக்கை என்பது நம் மனதளவில் இருந்தாலும் சில கண்கள் படத்தான் செய்கிறது.


சில சமயம் கழித்துப் போட்ட பொருட்களை நடுவீதியில் எறிவது ,பூசணிக்காய் உடைப்பது போன்ற செயல்களால் மற்றவர் படும் துயரங்களைப் பார்க்கும்போது, "நீங்க நல்லா இருங்க", ஆனாலும் "அடுத்தவரும் நல்லா இருக்கணும் என்று நினைங்க !"என்று சொல்லத் 

தோன்றும்....



-K.BANUMATHINACHIAT

SIVAGIRI