ஒரு ரூபாய் இட்லி வியாபார தங்கம் ஆயாவிற்கு இன்று ஜனாதிபதி விருது. விருது வாங்க ஜனாதிபதி மாளிகை வந்த தங்கம் தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தாள்." />
" ஒரு ரூபாய் இட்லி வியாபார தங்கம் ஆயாவிற்கு இன்று ஜனாதிபதி விருது. விருது வாங்க ஜனாதிபதி மாளிகை வந்த தங்கம் தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தாள். நினைவுகள் பின்னோக்கி செல்ல கடந்த கால நிகழ்வுகளை அசை போட ஆரம்பித்தாள் தங்கம் ஆயா ..."
" வழுவூர் கிராமத்தில் தாய் தந்தையை இழந்த தன் ஒரே பேரன் ராஜாவை உயர்த்தி பிடிக்க உயிரை கையில் பிடித்து வாழ்ந்தாள் தங்கம் .
நல்ல படிக்க வைத்த தங்கம் ராஜா ராணுவத்துல சேர வழியும் காட்டினாள்.
அடுத்த தெரு அனாதை பொண்ணு லட்சுமி மீது ஒரு கண் ராஜாவிற்கு .
திடீர் எல்லைப் போர் எச்சரிக்கையால் எதிரிகள் குண்டு மழை பொழிய அதில் ராஜாவும் சிக்கிக் கொண்டான் .
தங்கம் ஆயா அழுது புலம்ப ராஜாவின் பூத உடல் அவன் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது, லட்சுமி தன் காதலன் மீது தலை வைத்து அழுது கதறினாள் . இறுதிச் சடங்கு ராணுவ மரியாதையோடு நடந்து முடிந்தது .
லட்சுமி தன் காதலனின் நினைவில் அழுது தவித்தாள் . ஆறுதல் கூறிய தங்கம் ஆயாவை அனணத்து கொண்டு அங்கேயே தங்கிவிட்டாள் லட்சுமி.
பல லட்சம் ரூபாய் பணம் ராணுவ துறை மூலமாக தங்கம் ஆயாவிற்கு வந்து சேர்ந்தது .
தினமும் நாலு ஏழைக்கு சோறு போட்டு பிறகு நாம சாப்பிடனும் அப்பத்தான் என் பேரன் ராஜா ஆத்மா சாந்தி அடையும் என்றாள் தங்கம் ஆயா லட்சுமிடம் .
நாலு பேருக்கு என்ன நாற்பது பேருக்கு சோறு போடுவோம் அதுக்கு ஒரு திட்டம் வெச்சிருக்கேன் என்றாள் மருமகள் லட்சுமி.
நான்கு வழி சாலையின் அருகே சின்னதாய் பத்து பேர் அமர்ந்து சாப்பிடும் இட்லி கடையை திறக்க மும்முரமாய் இருந்தாள் லட்சுமி .
மாலையில் எல்லா
வேலையும் முடிந்து ராஜா இட்லி கடை திறக்கப்பட்டது இட்லி ஒரு ரூபாய் , தோசை ஐஞ்சு ரூபாய் வியாபாரம் நன்றாக இருந்தது.
ராஜா இட்லி கடை அருகில் இயங்கி வந்த முதியோர் இல்லம் , அனாதை இல்லம் இரண்டிலும் பசியில்லாமல் நகர்ந்தது காலம்.
காலை மாலை இரு வேளையும் இட்லி , தோசை முதியோர் இல்லத்திற்கும் அனாதை இல்லத்திற்கும் ராஜாவின் நினைவாக காசு இல்லாமல் இலவசமாக அனுப்பிடுவாள் தங்கம் ஆயா.
இன்று பல ஊருக்கு தெரிந்து விட்டது ராஜா ஒரு ரூபாய் இட்லி கடை, காரணம் லட்சுமியின் கைப்பக்குவம் , ஆயாவின் ஆட்டுக்கல் சட்னி.
வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு ஒரு உயிர் இழப்பில் பல நூறு வயிறு நிறையுது எல்லாத்துக்கும் காரணம் லட்சுமி தான், என் மருமகள் அல்ல அவள் என் மகள் என்ற பூரிப்போடு ஜனாதிபதி விருது வாங்க முன்னோக்கி நடந்தாள் தேசத் தியாகி ராஜாவின் ஆயா தங்கம் ... "
- சீர்காழி. ஆர். சீதாராமன்.
- 9842371679 .