இளைஞனே
இருட்டிலும்
பார்வை வெளிச்சத்தில்
பயணம் செய்
இலக்கைத்தொட
இது போதும்.
பந்தயத்தில்
பத்து பேர் ஓடினாலும்
முதலில் வருபவர்க்கு
தான்
வெற்றிப் பரிசு
அந்த முதல் வரிசையில்
நீ இருப்பதாக
நினைவில் கொண்டு
பயிற்சியெடுத்து
முன்னேறு.
நீயும்
வெற்றியாளனாய்
வெளிச்சத்தில்
பயணிப்பாய்.
காலம் கடப்பதற்குள்
கால்களுக்கு
வேலை கொடு
வேகத்தை
துரிதப்படுத்தி
வெற்றியின் இலக்கை
விரைந்து தொடு...!
-கே.எஸ்.ரவிச்சந்திரன்
மணமேல்குடி.