இனிமை ஒன்றே என்றும் உங்களை நெருங்கட்டும்
துணிவை மனதில் ஏற்கும் அனுபவம் வளரட்டும்
கற்ற நற்கல்வியை பற்றிட நல்லெண்ணம் பெருகட்டும்
வாட்டும் துன்பம் கண்டு அதை இல்லாதாக்கிடுங்கள்
தூக்கம் உம்மைத் தாக்கும்
துச்சமெனக் எதிர்கொள்ளுங்கள்
ஏக்கம் என்றும் தீர படித்தே உழைத்திடுங்கள்
முப்பெரும் சக்திகள் சேர்ந்தே எப்போதும் கிடைக்கட்டும்
நாளும் அறிவை அடைந்திட பெற்றோரைத் துதியுங்கள்..!
- துரை சேகர்
கோவை.