tamilnadu epaper

எழுத்தாளர் இரமணிஷர்மா எழுதிய சிறுகதை நூல் வெளியீட்டு விழா...

எழுத்தாளர் இரமணிஷர்மா எழுதிய சிறுகதை நூல் வெளியீட்டு விழா...

மதுரை.

மதுரையைச் சேர்ந்த கவிஞரும் ஓவியரும் எழுத்தாளருமான இரமணிஷர்மா எழுதிய 'காண்பன யாவுமாய்' சிறுகதை நூல் மதுரையில் நேற்று வெளியிடப்பட்டது.

 

இவ்விழாவிற்கு பேராசிரியர் கம்பம் புதியவன் தலைமையேற்றார். வழக்கறிஞர் கிருஷ்ணவேணி அனைவரையும் வரவேற்றார்.

முன்னதாக, வங்கி அதிகாரியும் தமுஎகச தலைவர்களுள் ஒருவருமான மறைந்த ந.ஸ்ரீதரின் படத்திறப்பும் நினைவஞ்சலியும் செலுத்தப்பட்டது.

சிறுகதை நூலினை சிஇஓஏ கல்விக்குழும நிறுவனர் இராஜா கிளைமாக்ஸ் வெளியிட, பொறியாளர் சு.குத்தாலிங்கம் பெற்றுக்கொண்டார். நூலை அறிமுகம் செய்து கவிஞர் மு.முருகேஷ் பேச, நூலிலுள்ள கதைகளைத் திறனாய்வு செய்து எழுத்தாளர் ம.மணிமாறன் உரையாற்றினார். விழாவில், ஓவியக்கவிஞர்கள் ஸ்ரீரசா, வெண்புறா, ஓய்வுபெற்ற கலால் வரித்துறை அதிகாரி ச.கஜேந்திரன், சாந்தாராம், இளங்கோவன் கார்மேகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிறைவாக, எழுத்தாளர் இரமணிஷர்மா ஏற்புரையாற்றினார்.