tamilnadu epaper

கல்யாணம்

கல்யாணம்

ஏன் கலா கல்யாணம் வேணாம்னு சொல்றே?"

 

"எனக்குப் பிடிக்கலேன்னா விட்டுடு வர்ஷா!"

 

"காரணத்தைத் தெரிஞ்சுக்கலாமா கலா?"

 

"அதெல்லாம் உனக்கெதுக்கு?!"

 

"என்கிட்ட சொல்லக்கூடாதுன்னா விட்டுடு. நான் உன்னைக் கட்டாயப்படுத்தலே..."

 

"மூக்குக்கு மேல கோபத்தைப் பாரு...சொல்ல வேணாம்னு நினைச்சேன். சொல்ல வெச்சுட்டே..."

 

"ம்...சீக்கிரம் சொல்லு..."

 

"மாப்பிள்ளை முகத்தை நல்லா உத்துப் பார்த்தியா வர்ஷா?!"

 

"ஏன் நல்லா தானே இருக்கார்?"

 

"நல்லா...இருக்காரா...?"

 

" ஏன் இந்த இழுவை? நீயேதான் சொல்லித் தொலையேன்... என்ன காரணமா இருக்கும்னு யோசிச்சு யோசிச்சு மண்டை காயுது..."

 

“வெளியே கொட்டுற மழையில போய் நனையேன். மண்டை கூலாயிடும்!”

 

“நக்கலா கலா?"

 

" சரி...சரி...சொல்லித் தொலைக்கிறேன்..."

 

" சஸ்பென்ஸ் வைக்காம சீக்கிரமா சொல்லித் தொலை. எனக்கு தலைக்கு மேல வேலை இருக்கு..."

 

"என்னை மட்டும் வேலை வெட்டி இல்லாதவள்னு நெனச்சியா?"

 

" தாங்க முடியல. நீ சொன்னா சொல்லு... சொல்லலேன்னா ஆளை விடு...”

 

“சரி சரி சொல்லிடறேன். மாப்பிள்ளைக்கு வழுக்கை... அதான் காரணம். போதுமா?"

 

"அதான் அறுபதாம் கல்யாணம் வேணாம்னு சொல்றியா என் அருமைத் தாயே?.... எங்க அப்பாவுக்கு வழுக்கை தான் அழகு..." என்றபடி விளையாட்டாகப் பேசிக் கொண்டிருந்த தன் தாய் கலாவை ஆசையுடன் கட்டிப்பிடித்தாள் மகள் வர்ஷா!

 

      *-ரிஷிவந்தியா,தஞ்சாவூர்.*

***************************************