பாலசந்தர் மண்ணச்சநல்லூர்.
ஹாய் டாடி எப்படி இருக்கீங்க.?.
பைன் டா ஆமா நீங்க கிளம்பிடீங்களா?
யெஸ்> டாடி ஆன்திவே டூ துர்கா டெம்பிள்.
நியர் விஜயவாடா! "ஓகே டா
ஆப்பரேஷன் செய்யனும். ஐ வில் கால் யூ லேட்டர்!.
வீடியோ காலில் வந்த தன் ஒரே செல்லமகளுடன் பேசி விட்டு, ரஞ்சிதா என்று கூப்பிட்டார் டாக்டர் கார்த்திகேயன்.
சார் என்றவாறே உள்ளே வந்தாள் நர்ஸ் ரஞ்சிதா.
என்னாச்சு அந்த கணேசன்.வந்துட்டாங்க பணம் கட்டி வெயிட் பண்றாங்க என்று கூற பின்ன வராம போக முடியுமா என்ன? சரி நான் ஆப்பரேஷன் செய்யனும் ரெடி பண்ணு.
என்று கூறினார் டாக்டர்.
ரஞ்சிதா நேற்று காலை நடந்ததை எண்ணிப் பார்த்தாள்.
மகனுக்கு ஆப்பரேஷன் இல்லாம கரைக்க முடியாதா? கேட்டதுதான் தாமதம், ஏம்மா நீ என்ன நெனச்சு கிட்டு இருக்க? சிறுநீரக கல் சற்று பெரிசா இருக்கு ஆறு மில்லி மீட்டர் அளவுக்கு.!!
நீ வேணா போய் கூழைப்பூ வாழதண்டு சூஸ் கொடு.
கல் கரையாம பெரிசா வளந்து கிட்னி அதாம்மா, சிறுநீரகம் இரண்டும் கெட்டு வயிறு வீங்கி, கால் வீங்கி, தொண்டையில ஓட்டை போட்டு... என்று முடிக்குமுன், தடால் என்று அந்த பெண் மயங்கி விழுந்தார்.
ரஞ்சிதா வந்து தூக்கி தண்ணீர் தெளித்து ஆசுவாசப் படுத்த எவ்வளவு பணம் கட்டணும்.
"ஒரு லட்சம் ரூபாய் செலவு ஆகும் நாளைக்கு காலைல கட்டிரு.!"
டாக்டர் உத்தரவு இட தலையாட்டி கொண்டு நகர.ரஞ்சிதாவைப் பார்த்து, என்ன? இது சின்ன கல் தானே, மருந்து மாத்திரை தந்து கரைக்கலாமேன்னு தோணுதா?."
இல்லை ,சார்!," மெல்ல தலையாட்டினாள் ரஞ்சிதா.
பாவம்!. என்று மனதிற்குள் நினைத்து கொண்டு நின்றது கண்ணில் நிழலாடியது.
ஆப்பரேஷன் முடிந்தது.
வீட்டில் நுழைந்த உடன், சோபாவில் சிலையாக அமர்ந்து இருந்த மனைவியை உலுக்கிய டாக்டர் கார்த்திகேயன் . என்னம்மா ,ஆச்சு ஏன் இப்படி உட்கார்ந்து இருக்க ?சொல்லு கேட்டவருக்கு,டீவியை காட்டினார் டாக்டர் மனைவி.
அதில் ஃப்ளாஷ் நியூஸ் ஓடியது
விஜயவாடா அருகில் உள்ள துர்கை கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற புது மணதம்பதிகள் சென்ற கார் மீது பாறாங்கல் விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்கள்.
சுவற்றில் இருந்த காலண்டரில் துர்காதேவி க்கு பதிலாக கணேசன் அம்மா துர்கா வந்து மறைந்தாள்.